பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 விந்தன் பேசி வரவேற்கிறான், மாமா மகள் நீலாவைக் காதலிக்க முடியாமலும் கைவிட முடியாமலும் தடுமாறுகிறான, மணமாகாதவன் போல் நடிக்கிறான் மாதவனின் நடிப்பை ஆனநதனும், அருணாவும் நன்கு பயன்படுத்தி மதனாவின் மனத்தைத் திசை திருப்ப முயல்கின்றனர் எனினும், மதனா மாதவனைத் திடமாக நம்புகிறாள் பின்னர் மாதவனும், மதனாவும் சந்திக்கிறபோது அருணாவும், ஆனந்தனும் அதுவரை ஆடிய நாடகம் அம்பலமாகிறது இருவரும் மாதவனின் தாக்குதலுக்குப் பயந்து ஓடுகின்றனர் மாமன் மகள் நீலாவிடம் எவ்வளவுதான் மாதவன் நடித்த போதிலும் ஒருநாள் உண்மை வெளிபட்டு விடுகிறது! ஆம், அச்சிட்ட மாதவன் - மதனா திருமண அழைப்பிதழை நீலா காட்டியபோது எல்லாம் வெளிப்பட்டு விடுகிறது. அப்பொழுது மாதவன் 'நீ என்னை நினைத்துக் கொண்டிருந்த அளவுக்கு நான் உன்னை நினைத்தக் கொண்டிருக்கவில்லை' என்று ஒரே வரியில் உண்மையை உடைத்துச் சொல்லி விடுகிறான் உண்மையைத் தெரிந்துகொண்ட பின்னர் ஊருக்குப் புறப்பட ஆயத்தமானார் மாமா மகாலிங்கம் அத்தருணத்தில் கண்கலங்கிய மாதவனைக் கண்ட நீலா ஆறுதல் கூறுகிறாள் அப்பொழுது கிராமத்தி லிருந்த மாதவனின் பெற்றோர்கள் வந்து சேருகின்றனர், 'மாதவன் ஸ்கூட்டரில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடக்கிறான்' என்று செய்தியோடு அவசரத் தந்தி வந்தது. அவசரத் தந்திகள் கொடுப்பதிலும், மொட்டைக் கடிதங்கள் எழுதுவதிலும் கை தேர்ந்தவன் அப்கோர்ஸ் ஆனந்தன் என்பதை நன்கு அறிந்தவனான மாதவன், ஆனந்தனைத் தேடிப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கியபோது, உண்மையை ஒப்புக் கொள்கிறான்; அருணாதான் தந்தி அடிக்கச் சொன்னார்கள் என்னும் உண்மையை ஒப்புக் கொள்கிறான். ஆத்திரம் அடைந்த மாதவன் ஆனந்தனை அடி அடியென்று அடிப்பதைத் தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த அருணா. ஆனந்தனுக்காக ஒரு டாக்சியை நிறுத்தி வைத்திருக்கிறாள் அவன் அடி தாளாமல் திரும்பியபோது அருணா ஆனந்தனை டாக்சியில் அழைத்துக் கொண்டு போகிறாள். மாதவனை எந்த விதத்திலாவது பழிவாங்க நினைத்த அருணா, ஆனந்தனின் யோசனையுடன் மதனாவை இரவு விடுதி ஒன்றுக்குக் கடத்திச் செல்கையில் கண்டுவிட்ட மாதவன் அவர்களைப் பின் தொடர்கிறான்; தற்செயலாக அவர்கள் செல்லும் விலாச அட்டை கிடைக்கிறது அவனுக்கு