பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய வடிவங்கள் 83 கொள்ளாமல இருக்கிறதே அதைப்பற்றித்தான் சிரிக்கிறேன் என்றது கட்டடம் (அறியாமை) திருவள்ளுவரின் குறள்போல் அரிய பெரிய செய்திகள் உள்ளடக்கி உயர்ந்து நிற்கின்றன. ஒவ்வொரு கதையும் கதைகளில் வெளிப்படும் கருத்துக்கள் மனிதன் சமூகத்தை உயர்த்தும் கருத்துக்கள் இத்தகைய படைப்பின் மூலம் விந்தனும் இலக்கிய உலகில் தகுதியான இடத்தைப் பெறுகிறார் விந்தனின் குட்டி கதைகள் வையத்தில் வாழ்வாங்கு வாழும் வள்ளுவரின் குறள்கள் போல் வாழும் வகை பெற்றவை எதையும் மூடி மறைத்து பேசும் மனிதனை விட எதையும் வெளிப்படையாக உண்மையாக பேசும் விலங்கினங்களே மேலானது என்கிற எண்ணத்தில் 17 கதைகளில் ஆடு, மாடு, குரங்கு, கிளி ஆகியவை களைக் கொண்டு பேச வைத்திருக்கிறார் ஆறறிவு படைத்த மனிதனைவிட ஐந்து அறிவு படைத்த விலங்கினங்களின் பேச்சை காது கொடுத்து கேட்க முடியவில்லை அவ்வளவு தெளிவாக சமூகச் சிந்தனையோடு பேசுகின்றன உதாரணத்துக்கு மாடு பேசுவதை கேளுங்கள், அதுவும் பசு மாடு பேசுவதைக் கேளுங்கள் 'வெள்ளைக்காரன் ஆதிக்கத்திலிருந்து உப்பை மீட்க வேண்டு மென்று நினைத்தார் மகாத்மா அதற்காக அவர் எங்கே சத்தியாக்கிரகம் செய்தார்? - கடற்கரையில்" "அந்நிய நாட்டுத்துணிகளின் பிடியிலிருந்து உள்நாட்டுத் துணி களைக் காக்க வேண்டுமென்று நினைத்தார் - காந்திஜி அதற்காக அவர் எங்கே சத்தியாக்கிரகம் செய்தார் - அந்நியத்துணிகள் விற்கும் கடைகளில் ' 'மதுவரக்கனிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்று நினைத்தார் மகாத்மா அதற்காக அவர் எங்கே சத்தியாகிரகம் செய்தார். - கள்ளுக்கடைகளில் ' “என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பதாகச் சொல்லிக் கொள்ளும் நீங்கள் எங்கே சத்தியாக்கிரகம் செய்கிறீர்கள்? மாடடிக்கும் தொட்டியிலா? இல்லை, பாராளுமன்றக் கட்டடத்தில் ஒரு காலத்தில் தெய்வத்தின் பேரால் எத்தனையோ யாகங்கள் நடந்து கொண்டிருந்தன அந்த யாகங்களில் ஆயிரமாயிரம் ஆடுகள் பலியிடப் பட்டு வந்தன அந்த யாகங்களிலிருந்து ஆடுகளை காப்பாற்ற நினைத்த புத்தர் என்ன செய்தார்? ஆட்டை நோக்கி வந்த கத்திக்கு கீழே தன் கழுத்தை நீட்டினார் அதனால் என்ன நடந்தது? ஆடும் பிழைத்தது. அவரோடு தருமம் பிழைத்தது '