பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 விந்தன் இலக்கியத் தடம் (விந்தனும் விமர்சனமும் பக். 29) எந்த விதத்தில் பார்த்தாலும் நாற்பதுகளிலிருந்து, தம்முடைய கதைகளுக்கான அசைக்க முடியாத அடித்தளமாக வைத்து, வாழ்ந்தால் லோ சர்க்கிள் - ஏழை எளியவர்களோடு வாழ்வேன். செத்தால் அவர்களோடு சாவேன் என்ற உயிர்த்துடிப்பின் வேகம் குன்றாமல் எழுதி வாழ்ந்தவர் விந்தன் என்பது வரலாற்றுப் பூர்வமான உண்மையாகும். இந்த நூற்றாண்டின் தமிழ்ப்படைப்பிலக்கிய வரலாற்றில் அவர் ஒரு தனித்தடத்தைப் பதித்துள்ளதோடு அத்தடத்தின் வழியே உருவெடுக்கும் பெருவழி ஒன்றனையும் வரலாற்றில் ஏற்படுத்தியவர் அவர். அவருடைய படைப்புகள் பல - குறிப்பாக அவருடைய சிறுகதைகளுள் பெரும்பாலானவை இலக்கிய ரசிகர்கள், திறனாய்வாளர்கள் போன்றோரால் மட்டுமல்லாமல் சமூகவியல் மற்றும் பண்பாட்டியல் வல்லுநர்களாலும் காலகட்ட மற்றும் கருத்தவீச்சுகள் தொடர்புடைய பல்வகைப்பட்ட ஆய்வுகளுக்கு உட்படக் கூடியவை விந்தனுடைய அதிமுக்கிய இலக்கியப் பங்களிப்பு அவருடைய சிறுகதைப் படைப்புகளிலேதான் உள்ளது. சில குட்டிக்கதைகள் சிலவும் ஒ. மனிதா வரிசையில் எழுதப்பட்ட கதைகள் சிலவும் இப்பங்களிப்பில் அடங்கக் கூடியவை. ஆரோக்கியமான அங்கத வழங்கு முறையை அவற்றில் காண முடிகின்றது. சிறுகதைகளில் இம்முறையைத் தொடர்ந்து கையாண்டதன் விளைவாகத் தம்முடைய நாவல்களிலும் அதை அவரால் இயல்பாகவும், எளிதாகவும் கையாள முடிந்தது. அவருடைய யதார்த்த அங்கதச் சித்திரிப்புகளைக் கண்ட ஆர்வி அவர்கள் அவரைக் கோபக்காரக்கலைஞர் என்று கூறுகின்றார் 'விந்தனுடைய நடையில் ஒரு நையாண்டிக் குரலும் ஒலிப்பதைக் கேட்கலாம். அது ஊசி குத்துவதுபோல் நறுக்கென்று தைக்கிறது. சமயத்தில் ஒட்டும் போடுகிறது. புதிய கலைஞர்கள் அவர் சென்ற ஒற்றையடித்தளத்தில் நடந்து அதைச் செம்மைப்படுத்துவது அவர்களுக்கும் நல்லது. சமுதாய நன்மைக்கும் வழியமைத்த கலைச்சிறப்பு சேரும் என்கிறார்.