பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 விந்தன் இலக்கியத் தடம் பாவையில் அவர் காலத்துச் சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்ட முயன்றிருக்கிறார். அதில் அவருக்கு முழுவெற்றி கிடைத்துள்ளது என்பது உண்மையே ஆகும். இப்பொழுது விந்தன் நம்மோடு வாழ்ந்து கொண்டிருந்தால் அவருக்குப்பிரியமான நடுத்தர வர்க்கம். உயர் நடுத்தரவர்க்கமாக மாறி வருவதையும் இவ்விரு வகுப்பைச் சார்ந்தவர்களும் வாழ்க்கை முன்னேற்றங்களைச் சுலபமான வழிகளில் ஒல்லும் வகையிலெல்லாம் பயன்படுத்திக் கொண்டு அடைந்துவிடத் துடிப்பதைக் கண்டு, தம்முடைய அங்கத மொழியில் இந்த எலி ஓட்டங்களைப் படம் பிடித்துக் காட்டுவார் என்று நான் எண்ணிப் பார்ப்பதுண்டு. சீட்டுக் கம்பெனிகள், பல கோடி பல இலட்சம் மற்றும் தங்கம் வெள்ளி பரிசுகள் இவையெல்லாம் அவருடைய எழுத்தில் பந்தாடிக் காட்டுவார் இல்லையா? இப்படி எல்லாம் சிந்தனை ஒடும் அவர் அன்று எழுதிய எழுத்துக்களாலேயே இன்றையச் சூழலில் நமக்கு அறைகூவல்களையும் அறிவுறுத்தல்களையும் வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர் பதித்துள்ள தடம் வலுவானது. அவர் நிறுவியுள்ள பாதை நீண்டு செல்வது. 1998