பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாட்டுத் தொழுவம் - ஸ்வீட்லின் பிரபாகரன் மக்கள் எழுத்தாளர் விந்தன் அவர்களிடம் நான் பேசிப் பழகவில்லையென்றாலும் அவரின் எழுத்துக்கள் மூலம் அவர் எனக்கு நன்கு பரிச்சயமானவர். மக்களின் உள்ளுணர்வுகளை, ஆனாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, பாத்திரப் படைப்பின் மூலம் வெளிப்படுத்திக் காட்டுபவர் விந்தன் அவர்களே எழுத்தாளரின் எழுத்துக்களை வைத்து எழுதுபவர் ஆணா, பெண்ணா என்று அடையாளம் கண்டு கொள்ள முடிகின்றது. ஆனால் விந்தன் அவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்களின் மன உணர்வுகளை மாட்டுத் தொழுவம் கதை மூலம் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார். இக்கதையில் வரும் நாயகி, தானே தன் கதையைச் சொல்வது போல் அமைந்துள்ளது. அன்பில்தான் பிறக்கிறோம், அன்பில்தான் வளர்கிறோம். ஆனால் எல்லோருமே அன்பில் வாழ முடிகிறதா? இல்லை. அப்படி வாழ முடியாத தரித்திர தேவதைகளில் நானும் ஒருத்தி என்று ஆரம்பமே இப்படியாக அமைகின்றது. பிறந்ததிலிருந்து அன்பையே கண்ட அவளுக்கு, புகுந்த வீட்டில் அன்பு பாலைவனமாகிப் போனதை அவளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. மாமியார், மாமனார் நாத்தனார், கொழுந்தன், கணவன் என்று கணவர் வீட்டுக்காரர்களின் எண்ணிக்கை அதிகமிருந்தாலும், அவர்களில் ஒருவரின் அன்புகூட இவளுக்குக் கிடைக்காமற் போனதில் இவளுக்கு ஏமாற்றமே. யாரோட அன்பு