பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 121 என்று வள்ளுவர் கூறும் அன்புடைமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவள் தலைவி. மனைவி என்பவள் அன்பு காட்டுவதில் தாயாகவும், அறிவுரை கூறுவதில் ஆசானாகவும் இருக்க வேண்டும். கணவனுக்கு எண்ணெய் முழுக்காட்டிக் குளிப்பாட்டுதலையும், அவனுக்கு வெற்றிலை கொடுக்க, அவன் அவள் கைக்கு முத்தம் கொடுத்த அன்புக் காட்சியையும் கவிஞர் பாரதிதாசன் குடும்ப விளக்கில் சுவைபட எழுதியுள்ளார். பாவேந்தர் பெண்ணுரிமையை வேண்டியவர். அதனால் அவருடைய படைப்புகள் எல்லாவற்றிலும் ஆணைவிடப் பெண்ணை உயர்ந்த வளாக - சிறந்த வளாக - அறிவுடையவளாக, ஆற்றலுள்ளவளாகப் படைத்துள்ளார். குடும்பத்தில் தலைவன், தலைவி என்னும் இருவரும் சிறப்புடையவராயினும் அகத்தலைமை பெண்ணுக்கு உரியதாக அமைகிறது குடும்பம் ஒளிபெற வேண்டுமானால் குடும்பத்தலைவி விளக்காக ஒளிர்தல் வேண்டும் என்றும் அவர் கூறுகின்றார். மாட்டுத் தொழுவத்தில் வரும் கதாநாயகிக்கு பாவேந்தா கூறும் குணங்கள் அத்தனையும் ஒட்டுமொத்தமாக இருந்தாலும் அவளை அவ்வீட்டார் சிறிதும் மதித்தாரில்லை. இலக்கியங்கள் பெண்மையை உயர்த்தலாம். காவியங்கள் பெண்மையைப் புகழலாம். சான்றோர்கள் பெண்மையைப் பாராட்டலாம். ஆனால் அதே பெண்மை சீரழிய விடலாமா? இன்றைய பெண்கள் சமூகத்தின் அழகுணர்வுகளுக்கு மட்டுமே அடிமைகள் அல்ல. பெண்களை வெறும் அலங்காரப் பொருட்களாக நினைத்துப் பலர் தங்கள் வியாபாரங்களுக்காக விளம்பரங்களில் பயன்படுத்துவது சரியல்ல. பாரதி, பாரதிதாசன் அவர்களைப் போன்றே டாக்டர் மு. வரதராசனார், திரு.வி.க. போன்றோர் பெண்களை உயர்வாக மதித்தவர்கள் என்பதற்கு அவர்கள் எழுதிய எழுத்துக்களே சான்று கூறும. பெண்கள் போற்றுதற் குரியவர்களாகவும், புகழுதலுக் குரியவர்களாகவும் இருந்தாலும் ஆண்மை, பெண்மையை