பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 141 இல்லை. இல்லை. பெண் குலத்தைத் தூய்மைப்படுத்தவே நான் இக்கதையை எழுதியிருக்கிறேன்! பெண்ணுடன் போட்டி போட்டுக் கொண்டு, நீங்கள் கச்சை கட்டிப் பேசியிருக்கிறீர்கள். உங்கள் பேச்சிலே பயம் தொனிக்கிறது! - நீங்கள் உணர்வீர்களோ, என்னவோ? - நான் உணருகிறேன். உங்களுடைய அந்தப் பயம் வாழட்டும்! ஏனெனில், அந்தப் பயம்தான் உங்களுக்கு அகல்யாவைப் பற்றி - அதாவது, இருபதாம் நூற்றாண்டைச் சார்ந்த பதில் வெட்டு அகல்யாவைப் பற்றி எழுத உங்களுக்குள் துணிச்சலை வழங்கியிருக்கிறது. அந்தத் துணிச்சலையும் வாழ்த்தத்தான் வேண்டும்! அகல்யா! - சிரிப்புக்குரிய ஓர் அபலை. காதலை நம்பி, வாழ்க்கையைக் கைகழுவவிட்ட பைத்தியக்காரி! கனகலிங்கம்! அனுதாபத்துக்குவிய ஓர் அப்பாவி! வாழ்க்கையை நம்பி, உயிரைக் கை நழுவ விட்டவன்! உறங்குவது போலும் சாக்காடு என்கிறார்கள் அனுபவசாலிகள். அந்தத் துக்கத்தில் அகல்யாவையும் கனகலிங்கத்தையும் கட்டுண்டிருக்கச் செய்து விட்டீர்கள் நீங்கள். உங்களுக்கு எவ்வளவோ வேலை மிச்சம். நல்லவர்கள் வாழ்வதில்லை! என்ற அபாய அறிவிப்பு வரிகளுடன் நீங்களும் கோழித் துக்கம் போட ஆரம்பித்துவிட்டீர்கள். உங்களது இந்தத் துக்கம்தான் எனக்கு விழிப்புச் சக்தியைக் கொடுத்திருக்கிறது. வாழ்க, உங்கள் உறக்கம்! சந்தேகமே இல்லை! கனகலிங்கம் அப்பாவிதான். முப்பது நாட்களுக்குக் கிட்டும் முப்பது ரூபாயச் சம்பளத்தினால் ஆறுதல் கனியாவிட்டாலும், அந்தப் புத்தகக் கடையில் தான் விரும்பியதை இனாமாகப் படிக்க முடிந்ததில் அவன் பெரிதும் தேறுதல் பெற்றான். காதலைக் கட்டுக்கதை என்றும், அந்தக் காதலை, கதைகளிலும் காவியங்களிலும் படித்து அனுபவிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் உணரக் கூடிய அளவுக்கு அவனுக்கு ப் பரிபக்குவம் அளித்திருக்கிறீர்கள். இந்த லட்சணத்தில் அவனுக்கு இதயம் வேறு இருந்து தொலைத்தது. உள்ளமோ வெள்ளை.