பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்குப் பிடித்த கதை - தமிழ்வயான் பத்து ஆண்டுகளுக்கு முன்னே பாலும் பாவையும் கல்கியில் தொடர்கதையாக வந்து கொண்டிருந்தபோது அதைப் படிக்கத் தொடங்கி வெளியான பிறகுதான் எனபது இன்னும் என் நினைவில் இருக்கிறது பொழுது போக்காகப் பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டு வந்த என்னை, அதற்கென்றே காலத்தை ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியத்தை உண்டு பண்ணிவிட்டது என்றால் மிகையாகாது. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலாவது வளர் கதைகளைப் படிககும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்ட பெருமை, முதல் முதற்கண் பாலும் பாவைக்கே உரித்தாகும்! அப்பொழுது வங்காளத்தில் ஏற்பட்ட வகுப்பு வெறிக் கலவரத்தின் காரணமாகப் பல பெண்கள் பலாத்கார முறையில் கற்பழிக்கப்பட்டு, பரிதாபத்திற்குரிய நிலையில் இருந்ததைப் பொறுக்காத அனணல் காநதியடிகள, அவர்களுடைய கணவன்மாரிடம், அவர்களை மீண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னதை அடிப்படையாகக் கொண்டு, அகல்யாவை உருவகப்படுத்தி நம்மை ஒப்புவமை நோககச் செய்திருக்கிறார் இதன் ஆசிரியர் விந்தன் என்பது தெளிவாகிறது. வாரந்தோறும் எழுதிவரும் வரப்பிரசாதம் பெற்றதன் பயனாகத் தான் விந்தன் அவர்கள் பாலும் பாவையும் கதையை இதழுக்கு இதழ் விறுவிறுப்புக் கூட்டி, அரிய சம்பவங்களைப் பிணைத்து, சீரிய கருத்துக்களை வழங்க முடிந்தது என்று நினைக்கத் தோன்றுகிறது.