பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 135 வருந்துகிறாள்; திகைக்கிறாள், தேம்புகிறாள்திக்குத் திசை தெரியாமல்: அவளது அபயக் குரலை ஏற்றுக் கொள்ள வந்த ஆண்டவனாக, கனகலிங்கம் அவள் முன்னே காட்சியளிக்கிறான்! அகல்யா, அவனிடம் வழுக்கி தன் விழுந்த வரலாற்றை ஆதியோடந்தமாகக் கூறித் தன்னை வாழ வைக்கும்படி தன்னை ஏற்கும்படி கெஞ்சுகிறாள். அவளது துயர வரலாற்றைக் கேட்டு அவளிடம் அனுதாயமே கொண்ட கனகலிங்கம், அவளது பிடிவாதம் அதிகரிக்கவே அவளது கோரிக்கைக்கு உடன்படுகிறான். புத்தகங்களை விற்பனை செய்து வர ஏவப்பட்ட கனகலிங்கம், கலைஞானபுரத்திலே தனக்கு விபரீதம் காத்திருக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. கலைஞான புரத்தில் விழா முடிந்ததும் கனகலிங்கம் அகல்யாவுடன் ஊர் திரும்புகிறான். வந்ததும் வராததுமாக வேலை பறி போன செய்தி கனகலிங்கத்தை வரவேற்கிறது; அகல்யா, தான் வேலை செய்து வரும் முதலாளியின் சகோதரனுடையமகள் என்பதை அறியாமல் அவளைக் கடத்திக்கொண்டு வந்த குற்றத்திற்காக, உண்டி கொடுத்து வந்தவரின் உறவையும், அதன் காரணமாக ஏற்பட்ட நண்பனின் நல்லுறவையும், இழக்க வேண்டியவனாகிறான் கனகலிங்கம். . காதலிக்காமல் கொல்வதை விட காதலித்தே கொன்று விடலாம் என்று சொன்னவனைத் தானே காதலித்துக் கொன்று விட்டுத் துர்ப்பக்கியத்தை தான் அடைகிறாள் அகல்யா அங்கே இனி விதி விட்ட வழி என்று நடக்கிறாள். அங்கும் ஒரு திருப்பம், தசரத குமாரன் உருவில் காத்திருக்கிறது: நம்பிப் போகையில், பொங்கும் அலைகடல்தான் சாசுவதம் என்று அங்கே ஐக்கியமாகிறாள். இது தான் கதை... அவள் படித்திருந்தும், அறிவிருந்தும், சிந்தனா சக்தி, பகுத்தறிவு, உலக அனுபவம் ஆகிய இவை இல்லாத காரணத்தால் தன்னுடைய கடமை, திறமை இவைகளை உணராது உணர்ச்சிக்கு அடிமையாகி உழலும் போது அகல்யாவின், பால் இரக்க உணர்ச்சி ஏற்படத்தான் செய்கிறது. அதே தவற்றைச் செய்த இந்திரன் ஏற்றம் பெறுவதைக் கண்டு ஆத்திரப்படாமல் இருக்க முடியவில்லை.