பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 விந்தன இலக்கியத் தடம ஆனால் முன்னேறி வந்திருக்கிறோம் என்று துணிந்து கூற எனக்கு அவ்வளவாகத் துணிச்சல் இல்லை. நாற்பது, ஐம்பது, அறுபகளில் தோன்றிய படைப்புக்களின தரம் இப்போது கணித்தாலும் இனறுள்ள தரத்தைக் காட்டிலும் பல படி உயர்ந்திருந்ததாகத்தான் காணப்படுகிறது. மொழி நயத்தில், நடையில், பாணியில் விரும்பத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றினாலும் உள்ளடக்கத்தில பண்பிலும் நோக்கிலும் இலக்கிலும் இலக்கியத் தரம் தாழ்ந்துதான் போயிருக்கிறது. விந்தன் அந்தப் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர். யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பது போல்தான் அவர் எழுத்து இலக்கிலும் பண்பிலும் இலக்கியத் தரத்தைக் கீழே போக விடாமல் கட்டிக் காப்பது ஒரு படைப்பாளியின் கடமை என்பதை அவர் எழுத்து நிச்சயமாக உணர்த்துவதை நாம காண்கிறோம். இன்று நம் சமூக வாழ்வில் உயர் குறிக்கோள் எதுவும் இல்லை அமைதியான முறையில் நிலையான மாற்றத்தை உண்டாக்க வழி வகை காணாமல், அடித்துப் பிடித்துக் கொண்டு அடாவடித்தனமாக, இருப்பவனை இழுத்துத் தள்ளிவிட்டு, புதுவகையான ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சமுதாயச் சீர்கேடு ஒரு புறம்; அதன் காரணமாகப் பண்பாட்டு அடிப்படைகளிலும் ஒரு பார்வைத் தெளிவற்ற குழப்பம் நிலவி வருகிறது. இவற்றைத்தான் இன்றைய படைப்புகளிலும் பிரதிபலிக்கக் காண்கிறோம். ஆனால் விந்தன் ஒரு லட்சியப் பற்றும் உறுதியான போக்கும் படைத்த ஒரு தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளி. அதனால் சமுதாயச் சீர்கேடுகளை அவரால் தெளிவாகச் சுட்டிக்காட்ட முடிந்தது சமுதாயத்தில் மலிந்து, கிட்டித்து ஒட்டிப் போய்க் கிடக்கும் ஏற்றத் தாழ்வுகளை அவரால் எடுத்துக்காட்ட முடிந்தது. சமுதாய வளர்ச்சிக்குக் குந்தகமான அநீதிகளை, அவலங்களை இனம் கண்டு அடையாளம் காட்டுகிற திறம் அவர் எழுத்துக்கு இருந்தது. ஒரு சமுதாயம் மானத் தோடும் மதிப்போடும் நீடித்து நிலைக்க, பணத்துக்குக் காட்டும் முக்கியத்துவத்தைவிட நல்ல