பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 11 சில சமயம் நம் உள்ளங்களைத் தொட்டு விடுகின்றது. சில வேளைகளில் உலுக்கியும் விடுகின்றது! இதற்குச் சான்று வருந்தும் உயிர்கள் போன்ற சின்னஞ் சிறுகதைகளே. தனக்கென்ற தனி பாஷை யோ, அல்லது திடுக்கிடும் சம்பவமோ, நண்பருடைய கற்பனைத்திறனை வீணாக்கவில்லை; மனித இனத்தை இழிவாக்கும் நிகழ்ச்சியோ அல்லது இந்திய நாகரிகத்தின் சீர்குலைவுக்கு வழி செய்யும் உணர்ச்சி மாறாட்டமோ இங்கு இல்லை. புதுமைக்கென வெறி பிடித்தலையும் கருத்துக் கோளாறுகளும் காணவில்லை. எல்லாவற்றையும் விட மற்றவர்களிடம் சகஜமாய்க் காணப்படும் நிரந்தரமின்மையின் சின்னங்கள் எதையும் நண்பர் இதுவரை பெறாது இருத்தலே அவருக்கு மேன்மை அளிக்குமென நான் நம்புகின்றேன். இலக்கியச் சேவையை அவர் தொடர்ந்து செய்ய வேண்டுமென்றும் விரும்புகின்றேன். 1953