பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 37 'விந்தன் கதைகளைப் படிப்பதென்றால் எனக்கு எப்போதும் மனதிலே பயம் உண்டாகும். படித்தால் மனதிலே என்னென்ன விதமான சங்கடங்கள் உண்டாகுமோ, எப்படிப்பட்ட வேதனைகளுக்கு ஆளாக நேருமோ என்றுதான் பயம்! வான்மீகியிலிருந்து விந்தன் வரை இந்திய இலக்கியங்களிற் சித்திரிக்கப்பட்டுள்ள அகலிகையை மாத்திரமன்றிப் பிற பெண்கள் பலரையும் பார்க்கும்போது எமக்குக் கஷ்டமாகத்தானிருக்கிறது. ஒரு வகையில் பார்க்கப்போனால், வான்மீகி தொடங்கிய இடத்துக்கு விந்தன் (கூடிய சிக்கல்களோடும் பிரச்சினைகளோடும்) வந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இக்கூற்றைச் சிறிது விளக்கியுரைக்க வேண்டும். ஆதி கவியாகிய வான்மீகி வீரயுகக் கதையொன்றைப் பாடினார். அதில் மனித இயல்புகள் பெரும்பாலும் அறிவியல், தெய்வீக வரையறைகளுக்குள் கட்டுப்படாமல் சித்திரிக்கப்பட்டன. காலப்போக்கில் கருத்து முதல் வாதமும் அதன் வெளிப்பாடான பல சிந்தனை வடிவங்களும் பெருகப் பெருக இராம கதையும் உருமாற்றம் பெற்றது. ராஜாஜி ரகு வீரன் பற்றிக் கூறியிருப்பது காவியம் முழுவதற்கும் ஏற்புடையதே : "வால்மீகி ரிஷியின் காவியத்தில் இராமனுடைய நடவடிக்கைகளை ஈசுவர அவதாரமாக வைத்து எழுதவில்லை... மொத்தத்தில் வால்மீகி ராமாயணத்தில் காணப்படும் ராமன் ஒரு சிறந்த ராஜகுமாரன், வீர புரு ஷ ன்; அபூர்வமான தெய்விக நற்குணங்கள் பெற்றவன். அம்மட் டே, கடவுளாக வேலை செய்யவில்லை! கம்பன், துளஸிதாஸர் ஆகியோர் இறையவதாரமாக இராமன் வணங்கப்பட்ட காலத்தில், இலட்சிய நோக்கிற் பாத்திரங்களைப் படைத்தவர்கள். ஒரு சிறு உதாரணம் மாத்திரம் போதும். வான்மீகியார் வாலியின் மனைவி தாரையைக் குரங்கு ஒழுக்கமே கொடுத்து உருவாக்கினார். கம்பனோ அவளைக்