பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 விந்தன் இலக்கியத் தடம் 'அட்சராப்பியாசம் என்னடி, அட்சராப்பியாசம். இதோ பார், அடேய் சந்தர் சந்தர்." ‘என்ன அப்பா என்று கேட்டுக்கொண்டே அங்கே வந்தான் பையன். 'கோடி வீட்டுக் கோடீஸ்வர அய்யரை உனக்குத் தெரியுமா? ‘தெரியுமே: "நாளையிலிருந்து நீ அவருடன் போ. அவர், தம் ஆபீசில் உனக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுப்பார். என்ன வேலை தெரியுமா? மானேஜர் மேஜையின்மேல் இருக்கும் மணி டங் என்று ஒலித்ததும், அவருக்கு முன்னால் நீ போய் பய பக்தியுடன் நின்று, "ஏன் சார்? என்று கேட்க வேண்டும்; அவர் வருவதற்கு முன்னால் நீ போய் பய பக்தியுடன் நின்று, ஏன் சார்? என்று கேட்க வேண்டும்; அவர் வருவதற்கு முன்னால் அவருடைய மேஜை, நாற்காலி முதலியவற்றைத் துடைத்து வைக்க வேண்டும். என்ன தெரிந்ததா? ‘தெரிந்தது அப்பா' பையன் போய்விட்டான். அவன் போனதும் மங்களம் இடுப்பில் ஒரு கையை வைத்துக் கொண்டு, 'இதுதான் அட்சராப்பியாசமா? இல்லை, கேட்கிறேன்! என்று இன்னொரு கையை வாத்தியாருக்கு முன்னால் நீட்டிக் கேட்டாள். 'யார் சொன்னது? இது ஆபீசாப்பியாசண்டி ஆபீசாப்பியாசம்’ என்றார் சிரித்துக்கொண்டே. - இதுதான் ஆபீசாப்பியாசம்' "தந்தை மகற்கு ஆற்றும் நன்றி, அவையத்து முந்தியிருப்பச் செயல் என்று படித்திருக்கும் நமக்குத் தமது ஒரே மைந்தனின் படிப்பைப் பற்றி வைத்தியலிங்கம் செய்த முடிவு புதுமையாக, புலப்படாததாகக் கூட இருக்கிறது. இல்லையா? ஆனால் ஆசிரியராக வாழ்வு முழுதும் பணியாற்றி வந்திருக்கும் நமது வைத்தியலிங்கம் மேற்படி குறளைப் படிக்காமலும் உணராமலுமா இருந்திருப்பார்? படித்திருந்தால், உணர்ந்திருந்தால் இப்படிச் செய்வாரா? ‘பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்பதை உணராத தந்தை, தமது மகனுக்குச் செய்ய வேண்டிய கடமையை மறந்த தந்தை! என்று ஆகாய - லட்சியவாதிகள் குரல் எழுப்புவார்கள். ஆமாம், இந்தப் புத்தக