பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம 67 புது அடிமை என்ற கதையில் ஒரு நீக்ரோவும், இந்திய அடிமையும் சந்திக்கின்றனர். நீக்ரோவிற்குப் புசிக்க உணவு உண்டு. இந்திய அடிமைக்கு அது கிடையாது. ஆனால் அடிமை என்ற சொல்லுக்குப் பல விளக்கங்கள் அளிக்கப்படும். இந்த முறையில் வர்க்க வேறுபாட்டைப் பல கதைகளில் விந்தன் விரிவாகக் கையாண்டுள்ளார். இவற்றை அவர் அறிவுப் பூர்வமாக எந்த ஒரு இடத்திலும் ஏற்றுக் கொண்டதாகக் கூறவில்லை. இருப்பினும் அவருடைய இதயம் இத்தகைய ஒரு சமூக அமைப்பில் சுரண்டலுக்கு உள்ளானவர்கள் பக்கத்தில் சார்ந்திருப்பபதைக் காண முடிகிறது. விந்தனுடைய படைப்புகளில் காணப்படும் மற்றொரு அம்சம், போலிகளைக் கிண்டல் செய்து விமரிசனம் செய்வதாகும். மேலே குறிப்பிட்ட சமூக வளர்ச்சியின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக ஏமாற்றும் மோசடியும் மிகவும் அதிகமாக இருப்பதை விந்தன் நன்கு உணர்கிறார். இந்த ஏமாற்றும் பேர் வழிகள் பல ரூபங்களில் தமிழ் நாட்டில் நடமாடுவதை அவர் காண்கிறார். அவரது பேனா அத்தகையவர்களைக் கேலிக்குள்ளாக்குகிறது. இம்முறைகளில் ஏமாற்றுபவர்களில் ஒரு வகையினர் வள்ளுவரைப் பற்றுக் கோடாகக் கொண்டு திரியும் பேராசிரியர் பன்றி முகனார் என்பவர். எல்லோருக்கும் நல்லவர் என்ற கதையின் நாயகர் இவர். எல்லோருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு முறையில் பேசுகிறார். இதன் வினை இனியன் என்ற இளைஞன் தற்கொலை செய்து கொள்கிறான். பன்றி முகனாரை ஆசிரியர் அறிமுகப்படுத்தும் முறையே அலாதியானது. "இழை நக்கி வள்ளுவனாரின் புண்ணியத்தால், இமாலயா பாங்க் பாஸ் புஸ்தகத்தின் ஏடுகளை ஒவ்வொன்றாக நக்கி யெடுத்து, பக்கத்துக்குப் பக்கம் பல்கிப் பெருகி வந்த எண்களைப் பார்த்துப் பார்த்துப் பரவசம் அடைந்து கொண்டிருந்தார் பேராசிரியர் பன்றிமுகனார்.” (' விந்தன் கதைகள் - பக்.132) இதே போன்ற மற்றொரு தமிழ்ப் பண்டிதர் கவிஞர் ஒன்பார் சுவையார். இவர்கள் எல்லோரும் தமிழ் மொழியை மாசு