பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பாமசிவம் 81 கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறதென்று கேள்விப்பட்ட வுட ன தம்முடைய எண்ணத்தைக் கைவிட்டுவிடுகிறார். தங்களுடைய பிரதிநிதியாகிய அவர் தங்கள் குறைகளைப் பற்றி ஏன் எடுத்துரைக்கவில்லை என்று குடிசைவாசிகள் வந்து கேட்கும் போது அவர்தான் தனக்கும் தன் குடும்பத்துக்கும்தான் பிரதிநிதி என்று சொல்லி விரட்டிவிடுகிறார். யாருக்குப் பிரதிநிதி என்ற இந்தக் கதையைப் போலவே மற்றும் பல கதைகளிலும் விந்தன் வசதியற்ற மக்களுக்காகக குரல் கொடுக்கிறார் பாட்டாளி மக்களுக்காகச் சிறுகதை இலக்கியத்தில் ஆரம்பத்தில் குரலகொடுக்க முன்வந்தவர்களில் விந்தனை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். கலகி நிறுவனத்தில் இருக்கும்போதே அவர் சாதாரணத் தொழிலாளியாக ஆரம்பித்து, கலகி கிருஷ்ணமூர்த்தியின் கண்டுபிடிபயாகக் கதைகளும் கட்டுரைகளும் எழுதி, பின்னர் அவர் கொளகை மறறவர்களுக்குப் பிடி க்காத காரணத்தால அநத நிறுவனததிலிருந்து விலகினாலும், விந்தனின் நூல் ஒன்றுக்குப் பாராட்டுரை எழுதியவர் கல்கிதான் பின்னர் தனியாக மனிதன் பத்திரிகையை நடததத் துணிந்தபோது விந்தனின் மனிதபிமான உணர்ச்சியையும் துணிவையும் மெச்சி அந்த இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதியவர் பேராசிரியர் மு. வரதராசனார். அதே சமயம் அந்த இதழின் கொள்கை முற்போக்கு ரீதியில் இருக்கக் கண்டு அதில் ஈடுபாடு கொண்டவர்களில் இரு இளைஞர்கள் புதுமைத் தமிழிலும், புதுமைப் பொருளிலும், புதுமை அமைப்பிலும், சிறந்த சிறுகதைப் படைப்பிலும் தமது முத்திரையைப் பதித்தார்கள். அந்த இரு இளைஞர்கள் சுந்தா ராமசாமியும் ஜெயகாந்தனும் ஆவர். தமிழ்ச் சிறுகதை வரலாறும் வளாச்சியும் {