பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதோ ஒரு சுயமரியாதைக்காரர் : 87 குருடரைப் பாருங்கள் 'ஆ நூறு பத்தி ஆறணா!"ஆ, நூறு பத்தி ஆறனா!' என்று கண்ணற்ற நிலையிலும் கைக் கோலை ஊன்றிக் கொண்டு கெளரவத்தோடு ஊதுவத்தி விற்கும் இவர் குரலைக் கேளுங்கள்! 'ஏ, தாழ்ந்த தமிழ்நாடே! தன்மானம் மிக்க தமிழனே!-ஏறு, முன்னேறு' என்ற கூச்சலை ஒரு முறைகூடக் கேட்டறியாத வடநாட்டுக்காரர். இவர். பெயர் ராம்ஜி. ஆக்ராவுக்கு அருகே உள்ள மதுரா என்னும் பதியில் ரீ கல்லாராமுக்கும் ரீமதி ஷியாமா பாய்க்கும் அருமந்த புத்திரனாக அவதரித்த இவர், பிறக்கும்போதே கண்களை இழந்திருந்தாராம், பாவம்: மிட்டாய் வியாபாரியாகிய ரீ கல்லாராம், தன் குருட்டுப் பிள்ளையைப் பற்றி என்ன நினைத்தாரோ, மகன் ராம்ஜி மட்டும், 'குருடனாயிருந்தாலும் நான் ஒரு வியாபாரியின் மகன், குருடனா யிருந்தாலும் நான் ஒரு வியாபாரியின் மகன் என்று அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டு சென்னைக்கு வந்தார். வந்ததும், அம்மா ரெண்டு கண்ணும் தெரியலே, தாயே!' என்றோ, 'மக்க ளைப் பெத்த மவராசமாரே ஒடி ஆடிப் பாடுபட முடியாத குருடனய்யா!' என்றோ இவர் தெருவில் ஒப்பாரி வைக்கவில்லை; அதற்குப் பதிலாக, "சைனா பஜார் முழுதும் என் வியாபார ஸ்தலம்' என்று மார்தட்டிக் கொண்டு கிளம்பினார், தானும் ஒரு வியாபாரி என்ற கெளரவத்தோடு 1951-ல் இவரது தந்தை காலமானாராம். கணவரை இழந்த அபலை அன்னையைக் காக்கும் பொறுப்பை இவர்தான் இப்போது ஏற்றுக்கொண்டிருக்கிறாராம். இதை அவர் பெருமையுடன் சொல் லும்போது, அவருடைய புறக்கண்கள் இருளடைந்து கிடந்தாலும் அகக்கண்கள் சுடர் விட்டுப் பிரகாசிப்பதை முகத்தின் வழியாகப் பார்க்க வேண்டுமே!-அடடா தென்னாடு தந்திருக்கும் பிச்சைக் காரச் செல்வங்கள் அனைத்தும் இந்த வடநாட்டுச் செல்வத்தை ஒருமுறை பார்க்க வேண்டும் அந்தச் செல்வத்தைப் போலத் தன்னம்பிக்கையோடு, தன்மானத்தோடு வாழப் பழக வேண்டும். அதன் மூலம் 'மனிதப் பண்பு' காப்பாற்றப்பட வேண்டும்; 'அதுவே வாழ்க்கை' என்ற உறுதியும் வேண்டும். இந்த உறுதியில்