பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதோ ஒரு சுயமரியாதைக்காரர் : 93 வில்லை - கைகளை எடுத்தே விட்டனர்; தாவிப் படர்ந்து தழைக்க இருந்த இளங் கொடியை வெட்டிச் சிதைத்து வீசி எறிந்தே விட்டது விதியின் கரம். பாவம், திரு லோகநாதன் கைகளை இழந்தார், இன்பக் கனவுகளை என்றுமே எட்டிப் பிடிக்க முடியாதவர் ஆனார். இதனால் அவருடைய வாழ்க்கையே ஆதாரமற்று ஆட்டங் கண்டு விட்டதுபோல் தோன்றிற்று. "கையே, மூளையின் சிற்பி' என்று கூறுகிறார்கள் கட்டடங் களைக் கட்டிய கையே, கற்பனைத் திறன்மிக்க மூளையின் அமைப்பையும் வளர்த்ததாம், மிருகப் பிராயத்தைத் துரத்தி மணி தப் பிராயத்தைக் கண்டதாம் அத்தகைய கைகளை எந்த மனிதன் தான் இழக்கத் துணிவான்? அப்படி இழக்க நேர்ந்த்ால் எந்த மனிதன்தான் தன் வாழ்க்கையே அஸ்தமித்து விட்டதாகக் கருதி வருந்தாமல் இருப்பான்? அப்படிப்பட்ட வருத்தம் தன் ஆத்மா வையே கசக்கிப் பிழிய திரு. லோகநாதன் கரைகள்னாக் கவலைக் கடலில் முழ்க், அதன் கடும் புயலில் சிக்கி வருந்தினார், வாடினார். வழி காணாமல் தவித்தார். தோழர் லோகநாதனின் பெற்றோர்களோ பரம ஏழைகள். எனவே கடவுள் இவர்களைச் சோதிக்காமல் சுழ்மா of Gogurymo முதல் சோதனை, லோகநாதன் கைகளை இழந்தது; இரண்டா வது சோதனை தந்தையை இழந்தது - இவ்வாறு சோதனைக்கு மேல் சோதனையைக் கண்ட அந்தக் குடும்பம், ունւգծ கலங்கியி ருக்கும் என்று ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள்! ஆனால் அன்னை நாகரத்தின அம்மை மட்டும் அடியோடு நம்பிக்கையை இழந்துவிடவில்லை; 'கைவிட்டுச் சென்ற கணவ' னும், 'கைகளை இழந்த பிள்ளை'யும் 'எங்கள் லட்சியமாகிய வாழ்க்கைப் பாதையில் நீயாவது தளராமல் நட' என்று தைரிய முட்டினர். அந்த அம்மைக்கு