பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதோ ஒரு சுயமரியாதைக்காரர் 1-5 தோழர் வெங்கடாசலம் பிறருடைய சுயமரியாதைக்கு எந்த விதத்திலும் பங்கம் விளைக்காமல் கடந்த நாற்பது வருடகாலமாகத் தன் சுயமரியாதை யைக் காப்பாற்றிக்கொண்டு வருபவர் தோழர் வெங்கடாசலம். கடவுள் கண்ணைக் கொடுப்பார் என்பார்கள். இவருடைய விஷயத்தில் அவர் ஏனோ அப்படிச் செய்யவில்லை, பதின்மூன்றா வது வயதிலேயே பெரியம்மை அவர் கண்களைப் பறித்துக் கொண்டுவிட்டது. என்ன செய்வார், பாவம் - ஏற்பது இகழ்ச்சி' என்று கருதிய இவர், மூன்றாவது வகுப்புடன் திண்ணைப் பள்ளிக்கூடத்துக்கு முழுக்குப்போட்டுவிட்டு, அறிவுக்கு உணவு தேடுவதற்குப் பதி லாக வயிற்றுக்கு உணவு தேடினார் சந்தர்ப்பம் முதலில் அவரை மாட்டு வண்டி ஒட்ட வைத்தது. ஏறக்குறைய எட்டாண்டுகள் முன்னால் செல்லும் வண்டிகள் வழி காட்டப் பின்னால் தன் வண்டியை ஒட்டி ஜீவனம் செய்தார். அதற்குப் பின் வணிகர் மசபிலே உதித்த அவருக்கு வாணிபத் தின்மேல் கவனம் சென்றது சிறுவன் ஒருவன் உதவியுடன் சென்னைமாநகர் வீதிகளிலே ரிளகாய், தனியா விற்கும் தெரு வியாபாரியாக மாறினார் அதனால் ஏற்பட்ட நஷ்டத்தால் ஐந்து வருட காலம் மளிகைக் கடையொன்றைத் தஞ்சமடைந்தார். உயிரும் உணர்ச்சியும் அற்ற தராசும் படிக்கல்லும், மரக்காலும் படியும் இவரைக் கைவிடவில்லை, ஒத்துழைத்தன எனவே, கண்ணில்லாத குறை ஒரு குறையாகவே தோன்றவில்லை. கடை முதலாளிக்கு - கருணை காட்டினார்: