பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதோ ஒரு சுயமரியாதைக்காரர்! Ꭵ 0 Ꭵ ஆர்வத்துடனும் சுறுசுறுப்புடனும் தோழர் முனுசாமி செய்யும் விந்தையைப் பார்த்தேன். அந்தக் கையில் சொக்குப்பொடி ஏதாவது வைத்திருக்கிறாரோ என்ற ஐயம் ஆம்; அவர் நிஜமாகவே சொக்குப் பொடிதான் வைத்திருந்தார். அவரது உழைப்பும் தன்னம்பிக்கை யும்தான் அந்தச் சொக்குப்பொடி! மாம்பலம் பாண்டிபஜாரில் நடைபாதை ஒரத்திலிருக்கும் ஒரு மரநிழ்ல் தர்ன், இவருக்கு தொழில் முறையில் அமைந்த ஷோ ரூம்'! புதுப்புது ம்ோஸ்தரில் வகைவகையான செருப்புகள் தயாரிக் கிறார்; பழைய செருப்புகளுக்குப் புத்துயிர் கொடுக்கிறார். ஆறா வது வகுப்புவரை படித்திருக்கிறார். உலக உருண்டையை ஜாம் ஜாம்' என்று சுற்றியவாறு, அமர்க்களமாக அரசியல் பேசுகிறார். 'டின் நெற்றி வியர்வையில் நீ உன் அப்பத்தைச் சாப்பிடு'ஏசுநாதசின் வாக்கில் நண்ப்ருக்குப் பெரும்மதிப்பு உண்டு. 'தன் கையே தனக்கு உதவு ன்னு ஒரு வாக்கம் சொல்லு வாங்க. அது என்வரைக்கும் அப்படியே மெய்தானுங்க. லார்: பாருங்களேன், இந்த என்னுடைய ஒரு கை தானுங்க இப்போ எனக்கு, என் பெண்சாதிக்கு, இரண்டு பிள்ளைங்களுக்கு எல்லாம் நிதம் சோறு போடுது பொழுது விடிய இங்கே வருவேன், மறுபடியும் வீட்டுக்குப் போக இருட்டிப் போகும். தினமும் இரண்டு மூன்று ரூபாய்க்குக் குறைச்சலிருக்காதுங்க...!" என்று தன்னை மறந்த பெருமிதத்துடன், உழைப்பின் நம்பிக்கையுடன் தோழர் முனுசாமி சொல்கிறார். இவருடைய குலத்தில் பிறந்து சோம்பேறிகளாய் ரெளடிகளாய் திரிபவர்கள், இந்தச் சுயமரியா தைக்கரிசரைப் பார்த்தாவது சுய உணர்வு பெறவேண்டுமென்று விழைகிறோம். எதிர்பார்க்கிறோம்! - மனிதன் , 1954 邻邻邻邻 邻