பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி வாழ்ந்த பாண்டி 9 'ஆமாங்க, காந்தி ஆலயப் பிரவேசம்கூட அவருக்குப் பிடிக்கலிங்க 'எங்களுக்கு முதல்லே வேண்டியது ஆலயப் பிரவே சம் இல்லே, இதயப் பிரவேசம்'தான்னு சொல்லி, அவர் எங்களுக் கெல்லாம் பூணுலை மாட்டிப் பிரமோபதேசம் செய்தாருங்க அப்புறம் எங்களிலே ஒருத்தனைச் சமைக்கச் சொல்லி, அவரும் எங்களோடு உட்கார்ந்து சாப்பிட்டாருங்க, அப்போ நாலைந்து அய்யமாருங்க சேர்ந்து வந்து, ஏண்டா, நீ பிராமணனாயிருந்தும் இப்படிச் செய்யலாமா?'ன்னு அவரைக் கேட்டாங்க அதுக்கு அவர் கடகடன்னு சிரிச்சுட்டு, 'நான் பிராமணன் என்கிறதை எப்பவோ மறந்து ட்டேன் நீங்க ஏண்டா அதை இன்னும் ஞாபகத் திலே வெச்சிட்டு அவஸ்தைப்படறிங்க? போங்கடா'ன்னுட்டா ருங்க 'அதனால் என்ன ஆயிற்று, தெரியுமா? உங்கள் மீசைக்கார அய்யர் இறந்த பிறகுகூட அவரைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல அவ்வளவு சுலபமாக ஆள் கிடைக்கவில்லை அதற்காக அவருடைய பினம் ரொம்ப நேரம் காத்துக் கொண்டிருக்க வேண்டியிருந்தது' என்று சொல்லிவிட்டு, நான் மெல்ல அவர்களி டமிருந்து நழுவுகிறேன் 'கொஞ்சம் வெத்திலையாச்சும் வாங்கிப் போட்டுக்கிட்டுப் போங்க' என்று அவர்களில் ஒருவர் மடியை அவிழ்க்கிறார் 'மீசைக்கார அய்ய'ருக்காக 'சரி, கொடுங்கள்' என்று வாங்கிப் போட்டுக் கொண்டு மேலே நடக்கிறேன் முத்தியால்பேட்டையிலுள்ள சித்தானந்த சுவாமிகளின் மடம் என் கவனத்தைக் கவருகிறது புதுவை நண்பர்களான பிரம்மராய அய்யர், எலிக்குஞ்சு செட்டியார், வேனு முதலி, குவளைக்கண்ணன், குள்ளச்சாமி ஆகியோரைப் பற்றித் தன் கட்டுரைகளிலும் கவிதைகளிலும் குறிப்பிட்டிருக்கும் பாரதி, இந்த மடத்தையும் மறக்காமல்,