பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 விந்தன் கட்டுரைகள் புதுமைப்பித்தன் இறப்பதற்கு இந்த வழிகளையெல்லாம் கையாளவில்லை, அவர் எழுதினார். ஆம்! அவர் வாழ்வதற்காக எழுதவில்லை, சாவதற்காக எழுதினார். எனக்குத் தெரிந்தவரை அவர் செத்துப் போனதற்குக் காரணம் இதுதான்! ஆனால் இரட்டைக் குழந்தைகளான எமனும் வறுமைப் பேயும் எப்பொழுதுமே பழியைத் தங்கள் மீது சுமத்திக்கொள்வ தில்லை, வேறு யார்மீதாவது, எதன் மீதாவது சுமத்திவிடுவதுதான் அவர்கள் வழக்கம். இந்த வழக்கத்தையொட்டித்தான் இன்று புதுமைப்பித்தன் இறந்ததற்குக் காரணம் புகையிலை என்று சிலர் கூசாமல் சொல்லுகிறார்கள். கவி பாரதியார் இறந்ததற்குக் காரணம் கஞ்சா என்று சொல்ல வில்லையா? - அந்த மாதிரி. அட, கடவுளே! - எந்த இழவெடுத்த தொழிலைச் செய்வதா யிருந்தாலும் அதற்கென்று ஒரு தெம்பு வேண்டியிருக்கிறது. இருப்பவர்கள் 'மளமளவென்று ஏறிக்கொண்டுவரும் 'பாங்க்' கனக்கிலும் பாவையரின் பசலை விழிகளிலும் அந்தத் தெம்பை வரவழைத்துக் கொள்கிறார்கள். இல்லாதவன் என்ன செய்வான்? - அவன் தனக்குப் பிடித்த, தன்னால் முடிந்த வேறு ஏதாவது ஒரு வழியில் தெம்பை வரவழைத்துக் கொள்ளப் பார்க்கிறான். அந்த வழி புதுமைப்பித்தனுக்குப் புகையிலையாயிருந்தது. பாரதியாருக் குக் கஞ்சாவாயிருந்தது. இதுதான் விஷயம்! சாதாரணமாக, புகையிலை இரசிகர்கள் அதை ஏதாவது ஒரு விதத்தில்தான் உபயோகிப்பது வழக்கம். ஆனால் நம் புதுமைப்பித் நனோ இரண்டு விதங்களில் அதை உபயோகப் படுத்தினார். ஒன்று புகை, இன்னொன்று சாரம், இரண்டும் வாய்ப் பிரயோகங் கள் மூன்றாவதான மூக்குப் பிரயோகத்தையும் அவர் கையாண்டி