பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல ஆண்டுகள் நெருங்கிப் பழகியவர். விந்தனைப் பற்றி அவர் அமுதசுரபி இதழில் எழுதிய ஒரு கட்டுரையை வாசித்த பிறகு எனக்கு அவருடைய நட்பு கிடைக்கலாயிற்று. என்னுடைய வேண்டுகோளுக்கிணங்கி மக்கள் எழுத்தாளர் வித்தன் என்ற நரலை எழுதினார். அவரைத் தொடர்ந்து விந்தனைப் பற்றியும், தமிழ் ஒளி, நாரணதுரைக்கண்ணன், வல்லிக்கண்ணன், கு. அழகிரிசாமி ஆகியோரைப் பற்றியும் அவருடைய நால்கள் வெளிவந்துள்ளன. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் நடத்தும் இலக்கிய நண்பர் வட்டக் கருத்தரங்குகளில் தொடர்ந்து ஆய்வுக் கட்டுரை எழுதி வரும் திரு. மு. பரமசிவம், விந்தன் ஒரு சிறந்த கட்டுரையாளர் என்கிற உண்மை மங்கி மறைந்து விடாமல் இந்நாலின் வாயிலாக அதனை பளிச்சிட்டுத் தோன்ற வைத்திருக்கின்றார். அவருக்கு எங்களின் உளமார்ந்த நன்றி உரியதாகுக. எங்களின் சி.எல்.எஸ். அச்சகக் கண்காணிப்பானர் திரு. தாமஸ் ஸ்டீபன் அவர்கள் எங்கள் நன்றிக்கு உரியவர். அன்புடன் சென்னை டாக்டர் தி. தயானந்தன் பிரான்சிஸ் 5-3-1998 பொதுச் செயலாளர் கிறிஸ்தவ இலக்கியச சங்கம் vii