பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படித்தேன் சொல்கிறேன் 73 அதற்கு நேர் விரோதமானது. அது மட்டுமல்ல; எந்த எழுத்தாளரின் வேலையும் எந்தப் பத்திரிகாலயத்திலும் 'நித்திய கண்டம், பூரண ஆயுசு' என்பது போலத்தான் இருக்கும். இது அந்தத் தொழிலின் சாபக்கேடு. இதுதவிர, ஆனந்தவிகடனில் முத்திரைக் கதைக்கு ரூபாய் ஐந்நூறு தருகிறார்களாமே, சாதாரணமாகப் பிரசுரமாகும் கதைக்குக் கூட ரூபாய் நூற்றைம்பது கொடுக்கிறார்களாமே? என்றெல்லாம் சொல்வார்கள். எழுதுவார்கள். இதுவும் மாயமான் கதைதான். எந்த எழுத்தாளர் எத்தனை முத்திரைக் கதைகள் எழுதியிருக்கிறார்? அவற்றில் எத்தனை பிரசுரமாகியிருக்கின்றன? எத்தனை ஐந்நூறு ரூபாய்கள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன? என்று கணக்குப் போட்டுப் பார்த்தால் அவற்றுக்குக் கிடைக்கும் விடை அநேகமா கப் பூஜ்யமாகத்தான் இருக்கும் நூற்றைம்பது ரூபாய் பெறக்கூடிய சாதாரண கதைகளின் கணக்கும் அப்படித்தான் இதற்குக் காரணம் அரசியல் உலகில் மட்டுமல்ல, கலை, இலக்கிய உலகிலும் சிண்டிகேட்' என்று ஒன்று இருப்பதுதான். அந்த சிண்டிகேட்'டின் விருப்பப்படியே எல்லாம் நடக்கும். அதை அரசியல் உலகில் எதிர்த்து நின்று ஆனானப்பட்ட இந்திரா காந்தி அடைந்த வெற்றியே இந்த உலகத்தில் ஒன்பதாவது அதிசயம் என்று சொல்ல வேண்டும் அந்த அதிசய வெற்றியைக் கலை உலகிலும் சரி, இலக்கிய உலகிலும் சரி, இந்த எழுத்தாளர்கள் அடைவதென்பது அவ்வளவு சுலபமல்ல 'அதெல்லாம் உங்களுக்கு ஏன்? எங்களுடைய சொந்த பலத் தைக் கொண்டே நாங்கள் நிற்போம்' என்று சிலர் சொல்லலாம் அப்படிச் சிலர் நிற்கவும் நிற்கிறார்கள். ஆனால் அவர்களில் பலர் வெவ்வேறு தொழில்களில் இருந்துகொண்டு, எழுத்துத் தொழி லைத் துணைத் த்ொழிலாக மேற்கொண்டிருப்பவர்கள் என்பதை இந் நூலாசிரியர்கள் மறந்து விடக்கூடாது.