பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 விந்தன் கட்டுரைகள் கொண்டு அகம் மகிழ்ந்தனர் - பாவம், காலம் கைவிட்டு விட்ட 'கறுப்பு மன்னர்’களைக் கடவுளால் படைக்கப்பட்ட மனுவும் கைவிட்டு விட்டார், அந்த மனுவைத் தாங்கி நின்ற நமது அருமைத் தமிழ் மறையும் கைவிட்டு விட்டது. எனவே ஆபத்பாந்தவனாக வந்த கருப்பர் கைப்பற்றிய வெள்ளை மன்னனின் கையைக் 'கறுப்பு மன்னர்கள் விடாமல் பற்றினர். ஆனால் தங்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்கும் கர்த்தாக்களாகக் கறுப்பு மன்னர்க ளையோ, அம் மன்னர்களுக்குக் கைகொடுத்த வெள்ளை மன்ன ரையோ நம்பவில்லை மக்கள்: அதற்கேற்றாற்போல் பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்தார் காந்தி', 'நாம் எல்லாரும் இந்நாட்டு வன்னர்! - ஆம் ஆம், நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்' என்று நம் பாரதியாரைப் பின்பற்றிப் பாடினார். அடிமையைச் சாடி ஆங்கிலேயனை விரட்டினார், அவன் தலையிலிருந்த மணி மகுடத்தைப் பறித்து மக்களின் தலையிலே சூட்ட ஓடினார், வழியிலே வந்து குறுக்கிட்டான் கோட்லே - தெய்வமான மனிதனும், மிருகமான மனிதனும் நேருக்கு நேராகச் சந்தித்தனர். 'இந்துக்கள்தான் அந்த மணிமகுடத்துக்கு உரியவர்கள்' என்றான் கோட்லே. 'இல்லை, முஸ்லிம்களும் அதற்கு உரியவர்களே!' என்றார் மகாத்மா. கேட்வில்லை பாவி: சுட்டான், சுட்டான், சுட்டேவிட்டான் - மகாத்மா ஏந்தியிருந்த மணிமகுடம் மண்ணில் உருண்டது, அந்த மகுடத்தை ஒடி எடுத்தார் நேருஜி. குறுக்கிட்டுத் தலையை நீட்டுகின்றனர் கோடீஸ்வரர்கள், தங்கள் தலையில் தான் மணிமகுடம் சூட்ட வேண்டுமென்று! குமுறி. நிற்கின்றனர் கோவனாண்டிகள்! நேருஜி பார்க்கிறார், பார்க்கிறார், இன்னும் பார்த்துக் கொண்டே இருக்கிறார். 'இந்தியா விடுதலையடைந்து ஏழு