பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விந்தன் வாழ்க்கைக் குறிப்புகள்

1916- செப்டம்பர் திங்கள் 22ஆம் நாள் செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள நாவலூர் என்னும் சிற்றூரில் வேதாசலம் - ஜானகியம்மாள் தம்பதிகளுக்குத் தலைமகனாகப் பிறந்தார். இயற்பெயர் கோவிந்தன். உடன் பிறந்தவர் சாமிநாதன் என்கிற இளவல் ஒருவர் மட்டுமே ஆகும்.

1921- சென்னை சூளை பட்டாளம் பகுதியில் உள்ள பி.அண்ட்சி பஞ்சாலையின் புகழ் எவ்வளவு பெரியதோ அதைவிடப் பன்டமங்கு பெரியது அநதப் பகுதியில் வாழும் தொழிலாளர்களின் போராட்ட உணர்வுகள் வர்க்கப் போராட்டங்கள் நிகழ்வதற்குக் களமாக அமைந்த அம் மண்ணையே தமது வாழும் இடமாகவும் கொண்டு இளமைக் கல்வியைத் துவக்கினார் கோவிந்தன்.

1931- வசதியும் வருவாயும் ஓரளவிற்கு இருந்த போதிலும், கல்வி அறிவு இல்லாமையும் மூடப்பழக்க வழக்கங்களும் கொண்ட பெற்றோர்கள் அவர் படிப்பில் கவனம் செலுத்தத் தவறினார்கள். எனினும் விழிப்பும், வெளிச்சமும் எதிர் கால வாழ்க்கைக்குத் தேவையென்பதை உணர்ந்த கோவிந்தன் இரவுப் பள்ளிகளில் படித்துத் தம் கல்வி அறிவை வளர்த்துக் கொண்டார். அதனுடே ஒவியம் கற்க விரும்பி ஓவியப் பள்ளியில் சேர்ந்தார்.

1936- ‘கருவிலே திரு’வுடைய கோவிந்தன் ஜெமினி ஸ்டுடியோ விளம்பரப் பகுதியில் ஓவியராகப் பணியாற்றிய போது, அவர் பாட்டனார் ‘படைக்கும் தொழில் தரித்திரத்தின் ஊற்று’ என்று கோவிந்தனின் படைப்பாற்றலை முடக்கினார். அதன் பிறகே நண்பன் இராஜபாதர் உதவியால் டாக்டர் மாசிலாமணி முதலியார் நடத்தி வந்த ‘தமிழரசு’ என்னும் திங்கள் இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர்ந்தார்.

1939- ‘தமிழரசு’ இதழில் பாவேந்தர் பாரதிதாசன் போன்ற தமிழ்ப் புலவர்களும், அறிஞர்களும் தொடர்பு கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் தமிழ் மேல் பற்றும் எழுத்தார்வமும் கொண்டிருந்த கோவிந்தன் அவர்களோடு பழகும் வாய்ப்பினைப் பெறாத போதிலும் அவர்கள் எழுத்தினை அச்சுக்கோர்க்கும் வாய்ப்பினைப் பெற்றார். சான்றாக பாவேந்தர் பாரதிதாசன் எழுதியுள்ள ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்னும் கவிதை வரிகளை முதன்முதலில் அச்சுக் கோர்த்தவர் கோவிந்தன். அவர்களே ‘தமிழரசு’ இதழை விட்டு விலகி ஆனந்தப் போதினி, தாருல் இஸ்லாம், போன்ற இதழ்களில் பணியாற்றி தேர்ச்சி மிக்க அச்சுக் கோப்பாளராக ஆனந்த விகடனில் சேர்ந்தார்.

1939- ஏப்ரல் மாதம் 30ஆம் நாள் லீலாவதி என்னும் பெண்மணியை மணந்தார். 1940- தலைமகன் வரதராசன் பிறப்பு.

1941- சென்னை சூளை பட்டாளத்தில் ‘ராயல் ஓட்டல்’ என்னும் பெயரில் மிலிட்டரி ஓட்டல் ஒன்றை நடத்தினார்.

1942-இராஜாபாதர் உதவியால் கல்கி அச்சகத்தில் அச்சுக் கோப்பவராக சேர்ந்தார். ஏற்கெனவே சுதேசமித்திரன் ஆனந்தவிகடன் ஆகிய இதழ்களில்