பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/297

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

விந்தன் கதைகள்


இல்லை, அவள்தான் காரணம் என்றால், அந்தக் காரணத்துக்கு அவள் ஏன் ஆளானாள்?

ஒருவரைப்பற்றி ஒருவர் தெரிந்து கொள்ளாததால் வந்த வம்பு மட்டும் அல்ல அது; என்னைப் பற்றி நானும் அவளைப்பற்றி அவனும் தெரிந்து கொள்ளாததால் வந்த வம்புதான் இது

அப்படித் தெரிந்து கொள்ளாத குற்றம் யாருடையது? எங்களுடையதா? - இல்லை, இல்லவே இல்லை!

ஏனெனில், விரிந்து பரந்து கிடக்கும் இந்த உலகத்தில் நாங்கள் மட்டும் ஏன் எங்களைப்பற்றி எங்களுக்கே தெரியாமலும், ஒருவரைப்பற்றி ஒருவர் தெரிந்து கொள்ளாமலும், வாழ்க்கை நடத்தவில்லை. வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி, ஊருக்கு ஊர் எங்களைப் போல் விசித்திர வாழ்க்கை நடத்துபவர்கள் இருக்கத்தான் இருக்கிறார்கள்.

இன்று தெரியும் இந்த உண்மைக்கும் அன்று தெரிந்த அந்த உண்மைக்கும்தான் எவ்வளவு வித்தியாசம்!

* * *

காதலினால் வாழ்க்கையில் சாதிக்க முடியாத காரியம் ஒன்றுமே இல்லை!" என்று கவிஞர்கள் கதைக்கிறார்கள். அவர்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். ஏனெனில் நாங்கள் "பெரியோர்கள் நிச்சயித்தபடி" கல்யாணம் செய்துகொண்டவர்களல்ல; “நாங்கள் நிச்சயித்தபடி" கல்யாணம் செய்து கொண்டவர்கள்தான்.

அதாவது, எங்கள் கல்யாணம் காதல் கல்யாணம்!

குடும்ப நண்பர்கள் என்ற முறையில் கல்யாணத்துக்கு முன்னால் நான் அடிக்கடி அவளுடைய வீட்டுக்குப் போய் வருவதுண்டு. அவளும் என்னுடைய வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதுண்டு.

கல்யாணமான பிறகு அன்றுதான் இருவரும் முதன்முதலாகச் சந்திப்பதென்று முடிவாயிற்று.

அந்த நாள் நெருங்க நெருங்க, அந்த நேரமும் நெருங்க நெருங்க, எனக்கு உண்டான கிளர்ச்சியைத்தான் என்னவென்பேன்! உயிரும் உடலும் ஒன்றி உண்டான உணர்ச்சியைத்தான் என்னவென்பேன்!

கடைசி கடைசியாக அந்த நாளும் வந்தது; அந்த நேரமும் வந்தது. இருவரும் பெரியோருக்குத் தெரிந்து, பெற்றோருக்குத் தெரிந்து, உற்றாருக்குத் தெரிந்து, ஊராருக்குத் தெரிந்து,