பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/311

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

விந்தன் கதைகள்


"நான் இருந்து என்னத்தைப் பண்றதுங்க? பொழைப்பைத் தேடி போவேனா, இந்தப் புள்ளையைப் பார்த்துக்கிட்டு இருப்பேனா? - அதுக்குத்தான் இதுக்குத் தினம் கொஞ்சம் அபினைக் கொடுத்துப் படுக்க வச்சுடுவேன்; இது போதையிலே விறைச்சுக்கிட்டுக் கிடக்கும். என்பாட்டுக்கு என் வேலையை பார்க்க எங்கேயாச்சும் போயிடுவேன்...!"

“ஆமாம், இப்போதுதான் 'இந்த இழவு'களை யெல்லாம் சர்க்கார் ஒழித்து விட்டார்களே, இது உனக்கு ஏது?”

நாச்சியப்பன் சிரித்தான். "உங்களைப் போலொத்த 'பெரிய மனுஷ'ருங்க இருக்கிறப்போ, லோகத்திலே எது தான் கிடைக்காதுங்க? ஒண்ணுக்கு நாலு விலை கொடுத்தா கிடைக்காததெல்லாம் கிடைக்குங்களே!" என்றான்.

அவ்வளவுதான்; முதலியாருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. "டேய் ஜாக்கிரதையாப் பேசு! நீ நினைப்பது போல் நான் பெரிய மனுஷனுமில்லை; பிளாக் மார்க்கெட்காரனுமில்லை!" என்று ஒரு துள்ளுத் துள்ளினார்.

"போயும் போயும் அந்த அற்பப் பயலோடு நீங்கள் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தீர்களே? அப்போதே அவனைப் பேசாமல் போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்திருக்க வேண்டும்!" என்றார் முதலியாருக்குப் பக்கத்தில் இருந்தவர்.

இதைச் சொன்னதும் நாச்சியப்பன் வெலவெலத்துப் போய்த் தன்னிடம் சரணாகதியடைந்து விடுவான் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவனோ விழுந்து விழுந்து சிரித்தான்.

முதலியார் அவனை ஏற இறங்கப் பார்த்தார். "எதற்கும் ஒரு தகுதி வேண்டாமா? தகுதியில்லாதவனிடமெல்லாம் போய்த் தக்கவற்றைப் பேசிக் கொண்டா இருப்பது? போலீஸைக் கூப்பிடுங்கள், ஸார்" என்றார் முதலியாருக்கு எதிர்த்தாற்போல் இருந்தவர்.

‘ரயிலோ ஓடிக் கொண்டிருக்கிறது; போலீஸும் இந்தப் பெட்டிக்குள் இல்லை’ என்று வேடிக்கையாகக் கையை விரித்தார் புரொபஸர்.

‘போனாற் போகிறது, புண்ணியமாய்ப் போகட்டும் என்று பார்த்தேன். இவன் இவ்வளவு அதிகப்பிரசங்கியாயிருப்பான் என்று