பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

438

விந்தன் கதைகள்

இந்த 'ஆறு மணி' மட்டும் தனக்காக இன்னும் கொஞ்ச நேரம் தாமதித்திருந்தால்? - அந்த நாலணா, அந்த ஒரே ஒரு நாலணா தனக்குக் கிடைத்தாலும் கிடைத்திருக்கலாமல்லவா?

சரி, அதைப் பற்றி இப்போது எண்ணி பிரயோசனம்?-இழந்த சந்தர்ப்பம் இழந்ததுதான்!

இப்படி நினைத்தவனாய் அவன் மேலே ஓர் அடி எடுத்து வைத்தபோது, திருடன், திருடன்! பிடியுங்கள், பிடியுங்கள்! என்று யாரோ அலறும் சத்தம் - அதே உல்லாசப் பேர்வழி, தன்னை ஹோட்டல் ஹெவனுக்கு அழைத்துக்கொண்டு வந்த அதே உல்லாசப் பேர்வழி, தனக்கு சற்று தூரத்தில் ஓடும் ஒருவனைச் சுட்டிக் காட்டி மேற்கண்டவாறு அலறிக் கொண்டிருந்தான்!

அதற்குள் அவனைச் சூழ்ந்து கொண்ட ஒரு கூட்டம், "திருடனா! ஏதாவது அடிச்சிகிட்டுப் போயிட்டானா, என்ன?" என்று 'துக்கம் விசாரிக்க' ஆரம்பித்தது.

"ஆமாம், ஸார்! என் பர்ஸை அடிச்சிகிட்டுப் போயிட்டான், ஸார்!" என்றான் அவன் அழமாட்டாக் குறையாக.

"எவ்வளவு இருந்தது, அதில்?" என்று குத்திக் கிளறினார். அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர்.

"நானூறு ரூபாய்க்குமேல் இருக்கும், ஸார்!" -இது அவனுடைய பிரலாபம்!

"ச்சோச்சோ! அத்தனை ரூபாயை எடுத்துக் கொண்டு இந்த மாதிரி இடத்துக்கு வரலாமா, ஸார்?" - அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த இன்னொரு வருடைய அனுதாபம் இது!

இந்தப் பிரலாபமும் அனுதாபமும்தான் அங்கே எதிரொலித்தனவே தவிர, திருடனைப் பிடிக்கும் முயற்சியில் யாரும் ஈடுபடவில்லை -அந்தச்சமயம் அங்கே நின்றுகொண்டிருந்த ஒரே ஒரு போலீஸ்காரரைத் தவிர!

அவர்தான் என்ன செய்வார், பாவம்!-ஓடும் திருடனின் கையிலே மின்னிக்கொண்டிருந்த கத்தி அவரையும் அவ்வளவு எளிதில் அவனை நெருங்க விடாதபோது?

இவையனைத்தையும் ஒரு கணம் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற முத்து, 'பைத்தியக்காரர்கள்! ஓடுபவனின் கையில் 'பர்ஸ்' இருக்காது என்கிற 'தொழில் நுட்பம்' இவர்களுக்கு எப்படித் தெரியும்?' என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். பிறகு,