பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

444

விந்தன் கதைகள்

சந்து - எது கிடைத்தாலும் திருப்தியடைந்துவிடுகின்றன. இந்த அற்புதமான கருத்தை ஆதார சுருதியாக வைத்து, அபூர்வமான காவியம் ஒன்று எழுதினால் நோபல் பரிசு எனக்குக் கிடைக்காமல் வேறு யாருக்கு ஸார், கிடைத்துவிடும்?" என்றார் அவர் மிடுக்குடன்.

"நல்ல வேளை! என்னிடம் சொன்னது போல் வேறு எந்தக் கவிஞனிடமாவது இந்தக் கருத்தைச் சொல்லிவிடாதீர்கள்; அவன் உங்களை முந்திக் கொண்டு விடப்போகிறான்!" என்று நான் அவரை எச்சரித்து வைத்தேன்.

"ஆமாம், ஆமாம்; நான் இந்தக் காவியத்தை எழுதி முடிப்பதற்கு முன்னால் நீங்களும் வேறு யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்" என்று என்னையும் பதிலுக்கு எச்சரித்துவிட்டுச் சென்றார் அவர்.

நாலைந்து மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் கடற்கரைக்குப் போய்விட்டுக் கவிஞர் 'நட்'டின் வீட்டு வழியாக வந்து கொண்டிருந்தேன்.

வானத்தை நோக்கியபடி கவிஞர் வாசலில் நின்று கொண்டிருந்தார்.

"என்ன மிஸ்டர், நட்! காவியத்தை எழுதி முடித்து விட்டீர்களா?" என்றேன் நான், பழகிய தோஷத்துக்காகப் பார்த்தவுடன் ஏதாவது பேசி வைக்கவேண்டுமே என்று!

"நீங்களா? வாங்க ஸார், வாங்க! இன்னும் நாலே நாலு அடிகள்தான் பாக்கியிருக்கின்றன. அதைப்பற்றித்தான் இப்போதும் யோசிக்கிறேன், யோசிக்கிறேன், யோசித்துக்கொண்டே இருக்கிறேன்!" என்றார் அவர்.

மன்னியுங்கள்; நல்ல சமயத்தில் வந்து உங்கள் கற்பனைக்குத் தடையாக இருந்து விட்டேன்!" என்று நான் அவருக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, மேலே நடந்தேன்.

அப்போது 'ஓ' என்று அலறிக்கொண்டிருந்த குழந்தை விண்ட்டெருடன் அவருடைய மனைவி அங்கே வந்து, "இவளை என்னவென்று கேட்டீர்களா?" என்றாள் சிரித்துக் கொண்டே.

"என்னவாம் என் கண்ணுக்கு?" என்றார் கவிஞர், நோபல் பரிசுக்கு வித்திட்டுத் தந்த தன் அருமைக் குழந்தையை அன்புடன் வாங்கி அணைத்தபடி.