பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/175

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஊமைப் பட்டாசு

493

திட்டத்துக்குப் பிறகு முன்னைக் காட்டிலும் அதிகமாகப் பிள்ளைகள் பள்ளிக்கு வருவது என்னமோ உண்மைதான்.ஆனால் படிப்பதற்கு அல்ல; சாப்பிடுவதற்கு!-ஆம், சாப்பிட்டு முடிந்ததும், அவர்களில் பலர் வீட்டுக்குக் கிளம்பிவிடுவார்கள். 'ஏண்டா?' என்று கேட்டால், ‘எங்கம்மாவரச் சொன்னாங்க ஸார், எலும்பு பொறுக்க!' என்பார்கள்; 'எலும்பா, அதை எதற்குப் பொறுக்குகிறீர்கள்?' என்று கேட்டால், அதை எதற்கோ விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள், ஸார்! இரவுச் சாப்பாட்டுக்கு அதுதான் எங்களுக்கெல்லாம் வழிகாட்டுகிறது, ஸார்!’ என்பார்கள். அதற்கு மேல் நான் என்னத்தைச் சொல்ல, 'மங்களம் உண்டாகட்டும்!’ என்று அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவதைத் தவிர?

அவர்களைப் போலவே இவனும் ஒரு வேளை பகல் உணவுக்காகப் பள்ளிக்குச் சென்று, இரவு உணவுக்காக எதையாவது பொறுக்கி விற்பவனாயிருப்பானோ?-இருக்கலாம், யார் கண்டது?

தீபாவளியை முன்னிட்டு இன்று அந்தத் தொழிலை இவன் மேற்கொள்ளவில்லை போலும்!

என்ன சொன்னேன், 'தொழில்' என்றா சொன்னேன்?-'ஆம், அதுவும் ஒரு கலை!' என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்குத்தான் அவன் இன்னும் வளர வில்லையே?

ப்படி ஒரு 'பாரத புஷ்பம்' இந்தப் பக்கமாக வந்து கொண்டிருக்க, அப்படி ஒரு பாரத புஷ்பம் அந்தப் பக்கமாக வந்துகொண்டிருந்தது. அதற்கும் வயது பதினைந்துக்குக் கிட்டத்தட்ட இருக்கும். ஆனால் அது கோவணம் மட்டும் கட்டிக்கொண்டிருக்கவில்லை; அதற்கும் மேலே நாலு முழத்துக்குக் குறையாத சல்லாத் துணி வேறு கட்டிக்கொண்டிருந்தது-சமர்த்துப் பயல், சிதையில் வைத்த பிணம் எரிவதற்கு முன்னாலேயே அதன் இடையில் சுற்றியிருந்த சல்லாத் துணியை எப்படியோ இழுத்துக்கொண்டு வந்துவிட்டான் போலிருக்கிறது!- இல்லாவிட்டால் அந்தப் புத்தம் புதிய சல்லாத்துணி அவனுக்கு எங்கிருந்து கிடைத்திருக்கப் போகிறது?

சபாஷ்! அவனுடைய திறமைக்கு ஒரு சபாஷ் என்றால், தீபாவளியை முன்னிட்டு அவன் அணிந்து கொண்டிருக்கும்