பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 5O6

விந்தன் கதைகள்

"ஏன், என்னைப் பார்க்காமல் இருக்க முடியவில்லையா, உன்னால்?"

"முடியும்; இன்னொரு கண்ணையும் இழந்து விட்டால்!"

"ஏற்கெனவே ஒரு கண்ணை இழந்து விட்டாயா, என்ன?” என்று திடுக்கிட்டுக் கேட்டாள் அவள்.

"ஆம், இழந்துதான்விட்டேன்!" என்று வழக்கம்போல் சிரித்துக் கொண்டே நடந்தான் அவன்.

உண்மையில் அவன் இழந்தது கண்ணையல்ல, தன்னைத்தான் என்பதை உணர்ந்த அமுதா, தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.

"யாருக்கு யாரால் சாந்தி கிட்டி என்ன பிரயோசனம் ? அவனுக்கும் எனக்கும் சாந்தி சாவில் தான் கிட்டும்போலிருக்கிறது!"