பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/202

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

520

விந்தன் கதைகள்

"அறிந்தேன் உண்மையை; அதற்காகக் கலங்கமாட்டான் இந்தக் காளை! எந்தையே, என் அருமைத் தந்தையே! எங்கள் சிந்தனை செயல்படும் போது இம்மாதிரியான சிக்கல், தவறுகள் நேருவது ஏராளம்! ஏராளம்! அந்தத் தவறுகளைத் தாங்குவதற்கு நாங்கள் கொண்டுள்ள கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தாராளம், தாராளம்!"

இந்தச் சமயத்தில் சிதம்பரம் கைதட்ட "என்னப்பா இது? ஏன் கை தட்டுகிறீர்கள்? இப்பொழுது நான் மக்கள் மன்றத்திலா உரையாடிக் கொண்டிருக்கிறேன்?" என்றான் சிகாமணி.

"இல்லையா, இப்பொழுது நீ மக்கள் மன்றத்தில் உரையாடவில்லையா?" என்றார் சிதம்பரம், ஏதும் அறியாதவர் போல.

"இல்லை, அப்பா! என்னுடைய உணர்ச்சியில் ஒரு சொட்டு இங்கே உதிர்ந்து விட்டது; என்னுடைய சிந்தனையில் ஒரு துளி இங்கே சிதறிவிட்டது; அவ்வளவுதான்!”

"சரி, அப்புறம்?"

"அடுத்தாற்போல் என்னுடைய திருமணப் பந்தலில் நீங்கள் அவசியம் கட்ட வேண்டும், கறுப்புத்துணி!”

"அத்துடன் சங்கும் ஊதி, திருவாசகமும் பாட வேண்டுமா?"

“ஒரு வாசகமும் வேண்டாம்; இடையிடையே கொட்டு மேளம் முழங்கட்டும் அது எங்களுக்கு உடன்பாடே!"

"இவ்வளவுதானா, இன்னும் ஏதாவது உடன்பாடு உண்டா?”

"உண்டு" இரண்டு ரோஜாப்பூ மாலைகள்!

"ரோஜாப்பூ என்று சொல்லாதே; இரோசாப்பூ மாலை என்று சொல்லு!"

"வரவேற்கிறேன் அப்பா, வரவேற்கிறேன்; தமிழில் உங்களுக்குள்ள தனியாத ஆர்வத்தை நான் தலைவணங்கி வரவேற்கிறேன். ஆனால் இரண்டு இரோசாப்பூ மாலைகள் மட்டும் போதாது. என் திருமண விழாவுக்கு! இன்னும் சில பல மாலைகள் வேண்டும்; வாழ்வு வளம்பெற வாழ்த்துரை வழங்குவோருக்கு!”

"ஐயோ, இது மூடநம்பிக்கையாச்சே? பிறருடைய வாழ்த்துரையில் உன்னுடைய வாழ்வு வளம்பெறும் என்று நீ நம்பலாமா? அன்னையும் பிதாவும் ஆன்றோரும் சான்றோரும் செய்யும் 'ஆசீர்வாத'த்தை நம்பாத நீ; அவர்களுடைய 'வாழ்த்துரை'யை - -