பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலையும் வாழ்க்கையும்

527

எடுத்து ஓடுமோ, அவர்களை நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும்!” என்றார் டைரக்டர்.

"இவ்வளவுதானே, என்னுடைய 'பேபி'யை நினைத்துக் கொள்கிறேன்?"என்றாள் கும்கும் அலட்சியமாக.

"பேபியா, உங்களுக்கா!" என்றார் டைரக்டர் ஆச்சரியத்துடன்.

"அதற்குள் மறந்து விட்டீர்களா, என்ன? சென்ற வாரம் 'அவுட்டோர் ஷூலிட்டிங்' குக்காகப் பெங்களுருக்குப் போயிருந்தபோது நான் வாங்கிக் கொண்டு வந்தேனே, ஒரு நாய்க்குட்டி...."

"ஓ, அதைச் சொல்கிறீர்களா? சரி, எதை நினைத்துக் கொண்டால் என்ன? எனக்கு வேண்டியது 'எபெக்ட்' - அவ்வளவுதான்! அதோ பாருங்கள், அந்தக் கடையை நோக்கி நீங்கள் இந்தக் காரில் செல்கிறீர்கள். கடையை நெருங்கியதும் காரை நிறுத்தச் சொல்கிறீர்கள்; கார் நிற்கிறது. டிரைவர் இறங்கிக்கதவைத் திறக்கிறார்; நீங்கள் இறங்கி உள்ளே செல்கிறீர்கள். இது தான் முதல் ஷாட்!"

கும்கும் சிரித்தாள். "ஏன் சிரிக்கிறீர்கள்?"என்று கேட்டார் டைரக்டர்.

"ஒன்றுமில்லை. இப்பொழுது நான் எதை நாய்க்குட்டியாக நினைத்துக் கொள்ள வேண்டும்? எதன் மேல் அன்பைச் சொரிய வேண்டும்? கடை மீதா, கார் மீதா?"என்று கேட்டாள் அவள்.மேலும் சிரித்துக் கொண்டே.

"மன்னியுங்கள், அதற்குள் என்னுடைய கவனம் எங்கேயோ போய்விட்டது!" என்றார் அவர் அசடு வழிய.

வேறு எங்கே போயிருக்கும்? குதிரைப் பந்தயத்தின் மேல் போயிருக்கும்!

"கரெக்ட், கரெக்ட்! ஏன், நீங்கள் போவதில்லையா?”

இந்தச் சமயத்தில் படத் தயாரிப்பாளர் குறுக்கிட்டு, "அங்கே போகும் போது போவோமே ஸார்!" என்று பரிதாபத்துடன் சொல்லவே, "அடென்ஷன் ப்ளிஸ்!" என்று டைரக்டர் இரைந்து விட்டு, "இதோ இருக்கிறான் - இந்தப் பையனைத்தான் நீங்கள் நாய்க்குட்டியாக நினைத்துக் கொள்ள வேண்டும்; இவன் மேல் தான் அன்பைச் சொரிய வேண்டும். இவன் தாய் தந்தையற்ற அனாதை;