பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/227

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பிழைக்கத் தெரியாதவன்

545

அவ்வளவுதான்; அவசர அவசரமாக எழுந்து ஜன்னல் கதவுகள் அனைத்தையும் 'படார், படார்' என்று சாத்தி விட்டு, "அமைதியைக் குலைக்கிறார்கள்! எதையும் ஆற அமர யோசித்து ஏதாவது ஒரு முடிவுக்கு வரவேண்டிய வேளையிலே அமைதியைக் குலைக்கிறார்கள்!" என்றார் அவர், நடுங்கிக் கொண்டே.

"அட, சிங்கத் தமிழா! நீயா சீறிப் பாயும் வேங்கையின் கொடியை இமயமலையின் சிகரத்திலே பறக்க விட்டாய்?" என்றாள் அவள் சிரித்துக் கொண்டே.

"சிரிக்காதே! இப்போது எனக்கு வேண்டியது உன்னுடைய சிரிப்பு அல்ல! அமைதி!" என்று கத்தினார் அவர்.

"அடுத்தவன் வீட்டில் அமைதி நிலவாத போது உங்களுடைய வீட்டில் மட்டும் எப்படி அமைதி நிலவுமாம்?"

"தனிப்பட்டவன் கவனிக்கவேண்டிய பிரச்சனை அல்ல;

"அது அரசாங்கம் கவனிக்க வேண்டிய பிரச்சனை!"

"அடியார்கள் தங்களுடைய தற்காப்புக்கு ஆண்டவனை இழுப்பதுபோல் நீங்கள் ஏன் உங்களுடைய தற்காப்புக்கு அரசாங்கத்தை இழுக்கிறீர்கள்? தனிப்பட்டவன் வேறு, அரசாங்கம் வேறா? அரசாங்கத்தின் ஒர் அங்கம் தானே தனிப்பட்டவன்? தனிப்பட்டவன் தனிப்பட்டவனாகவே இருந்து விட்டால் சமூகம் ஏது, சமுதாயம் ஏது? அரசியல் ஏது, அரசாங்கம் தான் ஏது?”

“பேசாதே, தனிப்பட்டவன் என்ன செய்ய முடியுமோ, அதை நான் செய்து கொண்டு இருக்கிறேன்!”

எதைச் சொல்கிறீர்கள்? மின்சார விசிறியைக் சுழல விட்டதையா, ஜன்னல் கதவுகள் அத்தனையையும் அடைத்து விட்டதையா?”

இந்தச் சமயத்தில் கீழே போராடிக் கொண்டிருந்த மூன்றாவது மனிதன் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கச் சொன்னான்:

"இந்தாதம்பி, உன் சம்பளம்; எடுத்துக் கொண்டு போ சீக்கிரம்! ம், சீக்கிரம்!"

அதைப் பெற்றுக் கொண்டு அவன் நாத் தழுதழுக்கச் சொன்னான்:

வி.க.

-35வி.க.