பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/234

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

552

விந்தன் கதைகள்

மீசைக்காரனுக்குக் கோபம் வந்து விட்டது. "ஏய்! கட்டையை இறக்கு, கீழே!" என்று கட்டளை யிட்டான்.

"ஏன் சாமி?"

"ஐயே! ஏ...ன்..சா...மி? - கேள்வியைப் பாருடா, கேள்வியை!” என்று கிண்டல் செய்து கொண்டே, "இறக்கும்மே, கீழே! இப்போ பட்டணத்திலேயே கட்டையை 'ரேஷன்' செய்திருக்காங்கன்னு உனக்குத் தெரியாதா?" என்று அதட்டினான் 101.

"என்ன சாமி! என்ன செய்திருக்காங்க? ஏசனா? அப்படின்னா என்ன சாமி?

"உன் தலையைச் செய்திருக்காங்க இறக்கு கீழே!" என்றான் 101 வெறுப்புடன்.

இப்பொழுதும் மாரியாயிக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் பயந்து கொண்டு, தலையிலிருந்த சுமையை இறக்கிக் கீழே வைத்து விட்டாள்.

"சரி, இங்கேயே கொஞ்சநேரம் நின்னுக்கிட்டு இரு. என் 'டூட்டி’ முடிஞ்சதும் உன்னைப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கிட்டுப் போறேன்!”

"நான் வீட்டுக்குப் போவனும், சாமி! அவரு காயலாப் படுத்துக்கிட்டு இருக்காரே!”

"எவரு காயலாப் படுத்துக்கிட்டு இருக்கா? ...சீ... சும்மாயிரு!" என்று அவுள் தலையில் தட்டினான் 101.

மாரியாயி அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. 'கலகல' கண்ணிரைத் தரையில் கொட்டிக் கொண்டு பேசாமல் உட்கார்ந்து விட்டாள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் நூற்றியொன்றுக்கு 'டூட்டி' முடிந்துவிட்டது. அவன் மாரியாயியைக் கூட்டிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றான்.

மறுநாள் நீதி மன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டாள் மாரியாயி. தீர்ப்பு என்ன? அவள் செய்த மகத்தான குற்றத்திற்கு இரண்டு வாசச் சிறைவாசம்!

"வேணும்னா கட்டையை மட்டும் எடுத்துக்கிட்டு என்னை விட்டு விடுங்களேன், சாமி! காயலாப் படுத்துக்கிட்டுக் கிடக்கும் என்