பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"ஆபீஸாப்பியாசம்"

343

பள்ளிக்கூடத்தில்தான் சேர்க்கப் போகிறேன். என்னைக் கவனித்துக் கொண்டது போல் அவனையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேணும்..."

"அதற்கென்ன, அப்படியே ஆகட்டும்"

"நமஸ்காரம்!"

அவன் போய்விட்டான்; மங்களம் ஆரம்பித்தாள்.

"ஆமாம், நம் ஜயச்சந்திரனுக்கு ஐந்து வருஷங்கள் பூர்த்தியாகி ஆறாவது வருஷங்கூடப் பிறந்து விட்டதே இன்னும் எப்பொழுதுதான் அவனுக்கு நீங்கள் அக்ஷராப்பியாசம் செய்துவைக்கப் போகிறீர்கள்?"

"சரிதான்போடி, அது ஒன்றுதான் குறைச்சல் நமக்கு!”

“என்ன, அப்படிச்சொல்கிறீர்களே!இருப்பது ஒரு குழந்தை..."

"நான்மட்டும் இரண்டு என்றா சொல்கிறேன்?"

"உங்கள் பரிகாசமெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்; கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்;"

"என்னடி, உனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது? வயிற்றுச் சோற்றுக்கே வரும்படி போதாமல் மாதம் பிறந்தால் பத்தும் இருபதுமாகக் கடன் வாங்கிக் காலஷேபம் செய்ய வேண்டி யிருக்கிறது; அக்ஷராப்பியாசம் என்கிறாயே!”

"ரொம்ப அழகாய்த்தான் இருக்கிறது! ஊர்ப் பிள்ளைகளெல்லாம் உங்களைக் கொண்டு படிக்க வேண்டும்; உங்கள் பிள்ளை மட்டும் தற்குறியாகத் திரிய வேண்டுமாக்கும்?"

"அதற்கென்ன, அப்படியா விட்டுவிடுவேன்? பெற்றெடுத்த தோஷத்துக்காக அவனுக்கு அக்ஷராப்பியாசம் செய்து வைக்காவிட்டாலும் ஆபீஸாப்பியாசமாவது செய்து வைக்க மாட்டேனா?"

"அதென்ன, ஆபீஸாப்பியாசம்....?"

"சரியாய்ப் போச்சு; தயவு செய்து நீ கொஞ்ச நேரம் பேசாமலிரேன்! அதைப்பற்றி அப்புறம் பேசிக் கொள்ளலாம்.இப்போது வீட்டுச் செலவுக்கு இந்த மாதம் யாரிடம் இருபது ரூபாய் மேற்கொண்டு கடன் வாங்கலாம் என்று யோசித்துக்