பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/256

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குப்பையிலே குருக்கத்தி

தீபாவளிக்கு முதல் நாள் வந்திருந்த 'தீபாவளி மலர்'களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தீபா, அவற்றில் வெளியாகியிருந்த ஒரு விளம்பரத்தைக் கண்டதும் 'களுக்' கென்று சிரித்து விட்டாள். காரணம் அந்த விளம்பரத்தில் அவளும் அவளுடன் நடித்த அமர்நாத்தும் ஒருவரை யொருவர் அணைத்தபடி நின்று கொண்டிருந்த காட்சி, அவள் நினைக்க நினைக்க இனிக்கும் காட்சியாயிருந்தது தான்!

ஆனால்...

ஆயிரமாயிரம் ரஸிகர்கள் தன்னைக் காதலிக்கும் போது, அவனை மட்டும் தான் காதலிக்க முடியுமா? காதலித்தால் கல்யாணமுமல்லவா செய்து கொள்ள வேண்டியிருக்கிறது? கல்யாணம் செய்து கொண்டால் பைத்தியமுமல்லவா தெளிந்து விடுகிறது? பைத்தியம் தெளிந்தால் நட்சத்திரப் பதவியுமல்லவா போய் விடுகிறது?

என்ன இருந்தாலும் அன்று அவன் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது; டைரக்டருக்குத் தெரிந்திருந்தால்....

தெரிந்திருந்தால் என்ன, அவரையும் காதலித்துத் தொலைக்க வேண்டியிருந்திருக்கும்!

"எத்தனையோஜன்மம் எடுத்தெடுத்தே இளைத்தேன்!" என்பது போல, சினிமா உலகில்தான் காதலும் எத்தனையோ ஜன்மம் எடுத்தெடுத்து இளைக்க வேண்டியிருக்கிறதே!

இத்தனைக்கும் முன்னெரிச்சரிக்கையோடு 'அண்ணா!' என்றுகூட அழைத்துப் பார்க்கிறோம்; அவர்கள் எங்கே ‘தங்காய்!' என்று அழைக்கத் தயாராயிருக்கிறார்கள்?

மோசம், ரொம்ப மோசம்!

சிரிக்க வைத்தது; இவ்வளவு தூரம் அவளைச் சிந்திக்கவும் வைத்துவிட்ட அந்தச் சம்பவம் இது தான்;

கதாநாயகன், கதாநாயகியைக் கட்டிப் பிடித்து, கண்ணே ! கறுப்புச் சந்தை மணமே! இனி யாராலும் நம்மைப் பிரிக்க முடியாது,