பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/262

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இரண்டு ரூபாய்


"ண்ணே ! ஒரு பீடி இருந்தா கொடுக்கிறியா அண்ணே?" என்றான் சின்னசாமி, தான் அணிந்திருந்த சிவப்பு குல்லாயைக் கழற்றித் தலையைச் 'சொறி, சொறி' என்று சொரிந்து கொண்டே.

"என்னடா! சும்மா ஆளை ஒரு நோட்டம் விட்டுப் பார்க்கிறியா? இப்போத்தான் சம்பளத்தைக்கூட ஒசத்திக் கொடுத்திருக்காங்க, அதுக்குள்ளே நீ ஓசி பீடிக்கு வந்து நிக்கிறியே?" என்றான் பெரியசாமி, அதுவரை தான் காவல் காத்துவந்த இடத்தை விட்டுக் கொஞ்சம் அப்பால் நகர்ந்து கொண்டே.

"அங்கே சம்பளத்தை ஒசத்தினா, இங்கே அரிசி விலை, பருப்பு விலையை ஒசத்திடறாங்க! அதுக்கும் இதுக்கும்தான் சரியாய்ப் போகுதே!" என்றான் அவன்.

"அப்போ ஒண்ணு செய்!" என்றான் இவன்.

"என்ன அண்ணே , செய்யணுங்கிறே?"

"அதோ இருக்கா பார், ஒரு பழக்காரி! அவகிட்டே போய், "ஏம்மே, பிளாட்பாரத்திலே கடை வெச்சே?"ன்னு சும்மா ஒரு மெரட்டு மெரட்டிப் பாரு!"

"மெரட்னா?"

"அவ, 'இது ஒரு தண்ட எழவு'ன்னு எட்டணா எடுத்துக் கொடுக்க வருவா. உனக்கு இருக்கிற காஜிலே, 'அப்படிக் கொடுடி, என் ராஜாத்தி!'ன்னு அதை வாங்கிக் கிட்டு நீ நேரே இங்கே வந்து நின்னுடாதே! 'அதுக்கு வேறே ஆளைப் பாரும்மே, வா டேசனுக்கு'ன்னு சும்மா ஒரு சின்ன கலாட்டா பண்ணு; ஒரு ரூபா எடுத்து நீட்டுவா. அதுக்கும் மசியாதே! 'என்னா இன்னா லஞ்சம் வாங்கற பஞ்சப் பயன்னு நெனைச்சிட்டியா, எழுந்து வாம்மேன்னா!'ன்னு ஒரு இசுப்பு இசுத்துக்கிட்டே, கையிலே இருக்கிற குண்டாந்தடியைச் சும்மா ஒரு சொழட்டுச் சொழட்டு! அவ கில்லாடி, அதுக்கெல்லாம் பயப்பட மாட்டான்னாலும், உன் மூஞ்சி அதுக்குள்ளே அழுது வடியுமே, அதை நீ அவளுக்குத் தெரியாம மறைக்க வேண்டாமா, அதுக்காகத்தான் இது! அதுக்கு மேலே அவ ‘ம்மா நிறுத்தப்பேன்!'னு சொல்லிக்கிட்டே ஒண்ணரை ரூபா எடுத்துக் கொடுக்க வருவா; இந்த இடத்திலேதான் நீ அவளுக்கு ஒரு சின்ன லாப-