பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



360

விந்தன் கதைகள்

தவியாய்த் தவிக்கும் போது. எண்ணெயில் வேகும் பூரிக்கு எங்கே போவார்கள்? அவர்களுக்கெல்லாம் நீர் உபரிதானியம் கொடுத்தது போல் கணக்கு எழுதவேண்டும்; அவ்வாறு எழுதும்போது அந்தத் தானியத்துக்குரிய காசைக் கல்லாவில் போடவேண்டாமா?-அதற்காகத்தான் அந்த நூறு ரூபாய்க் காசு!"

"இப்போது தெரிகிறது......"

“என்னத்தைத் தெரிகிறது?-சரியாகத் தெரிந்து கொள்ளும், ஐயா! சிலர் ஞாயிற்றுக்கிழமை வாங்க வேண்டிய அரிசியை அடுத்த சனிக்கிழமை வரை வாங்காமல் இருந்து விடுவார்கள். அந்தக் 'கூப்பன்'களுக்குரியவர்களெல்லாம் அரிசி வாங்கிக்கொண்டு விட்டதுபோல், நீர் சனிக்கிழமையன்றே 'பில்' எழுதிக் கிழிந்து எறிந்துவிடவேண்டும். மறுநாள்.அவர்கள் வந்து என்னதான் பல்லைக் காட்டினாலும்.'நேற்றோடு காலாவதியாகிவிட்டது என்று கண்டிப்பாகச் சொல்லிவிடவேண்டும்.'

"தெரிகிறது; ஆனால் ஒரு சந்தேகம்......

"என்ன சந்தேகம்?"

"உபரிதானியத்துக்கும் சேர்த்து 'பில்' போட்டு விட்டு அரிசிக்கு மட்டும் காசுவாங்கினால் சந்தேகப்பட மாட்டார்களா?”

"ஆளைப்பார்த்து பில் போடுமே, ஐயா! பார்க்கும் போதே இது படிக்கத் தெரிந்த மூஞ்சி, இது படிக்கத் தெரியாத மூஞ்சி என்று தெரியாதா?”

"சரி!"

"சரி என்று சொல்லிவிட்டுப் போய் மக்காச்சோளம். புழுத்துப் போனரவை, இவற்றையெல்லாம் சேமித்து வைக்காதீர்; நம்முடைய ஹோட்டல்காரர்களுக்கு உதவாதவற்றையெல்லாம் கூப்பன்' காரருடைய தலையிலே கட்டப்பாரும்; அவற்றை வாங்கினால் தான் அரிசி போடுவேன் என்று கண்டிப்பாகச் சொல்லும்!"

"அவசியம் சொல்கிறேன்....."

“என்னிடம் சொல்வது போல் இழுத்துப் பறித்துக் கொண்டு சொல்லாதீர்; நன்றாய் அடித்துச்சொல்லும். 'நம்முடைய முறைப்படி’ சேகரிக்கும் அரிசி, கோதுமை ஆகியவற்றை நம்முடைய விலைப்படி நம் வாடிக்கைக் காரர்களுக்கு அவ்வப்போது