பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வேதாந்தம்

365

வலுத்தது. தலை கனத்தது. அத்துடன் 'விண், விண்' என்ற வலி வேறு தோன்றி அவனை வதைத்தது-தாங்க முடியவில்லை, அவனால்; துணிந்து நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு "கொஞ்சம்...... இப்படி...... வருகிறீர்களா?" என்று அவன் அழாக்குறையாக அழைத்தான்.

அப்பொழுதுதான் அவனைப் பார்த்ததுபோல் 'சட்'டென எழுந்து, "ஒரு நிமிஷம் இதோ வந்து விட்டேன்!” என்று சொல்லிக்கொண்டே அவர் உள்ளே சென்றார்.

"காலையில்.....உபரி தானியத்துக்காக..... காலையில்..... உபரிதானியத்துக்காக....." என்று மேலே சொல்ல முடியாமல் திணறினான் கோபாலசாமி.

"ஆமாம்; என்ன உபரிதானியத்துக்கு? சொல்லித் தொலையுமே!"

"ஒரு சந்தேகம்.... இன்று காலை...... நீங்கள்..... நீங்கள் என்னிடம் நூறு ரூபாய் கொடுத்தீர்களல்லவா?”

"ஆமாம்; அதை எங்கேயாவது தொலைத்து, விட்டீரா என்ன?"

அவ்வளவுதான்; "அப்பாடா!" என்று கோபால் சாமி பெருமூச்சுவிட்டான்; அவனுடைய சந்தேகம் தீர்ந்தது. முகமும் மலர்ந்தது.

"இல்லை; இவர்களுடன் நீங்கள் இப்போது பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதும்....."

"உமக்குச் சந்தேகம் வந்துவிட்டதாக்கும்? நல்ல ஆள் ஐயா, நீர்? அந்த வேதாந்தம் வாய் வேதாந்தம்; இந்த வேதாந்தம் வயிற்று வேதாந்தம்!" என்றார் கருப்பையா.

கோபாலசாமிக்கு போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது.