பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



382

விந்தன் கதைகள்

"குழந்தைன்னா கொஞ்சத்தான் வேணும், நீங்க எறிஞ்சு விழறதுக்கா இம்மூட்டு நேரம் அப்பா வரட்டும், அப்பா வரட்டும்’னு அவன் முழுச்சிக்கிட்டு இருந்தான்!”

"ஆமாம், போ! வயிறு சோத்துக்குக் கெஞ்சறப்போ நான் எங்கே குழந்தைக்கிட்டே கொஞ்சறது”

"அப்படின்னா, நீங்க இன்னும் ஒண்ணுமே சாப்பிடலையா?”

"இல்லை, ஏன் நீ ஒன்னுமே பண்ணலையா?”

"கையிலே காசில்லாம என்னத்தைப் பண்றது? பொழுது விடிஞ்சா, பொழுது போனா அந்தப் பலசரக்குக் கடைக்காரன் வந்து கழுத்தை அறுக்கிறான்....."

"சரி, அவனுக்கு என்ன தரணும்?”

"இருவது ரூவா?"

"இந்தா, இருவது ரூவா....."

"ட்டுக்காரர் வேறே வந்து....."

"அவருக்கு பத்து ரூவாதானே கொடுக்கணும்? இந்தா.....!"

"அதில்லாம அரிசிக்காரிக்கு நாலு ரூவா தரணும்; நான் வேறே இங்கேயும், அங்கேயுமா அஞ்சாறு ரூவா வரையிலே சில்லறைக் கடன் வாங்கியிருக்கேன்....."

"அப்போ சரியாப் போச்சு!-என் கையிலும் இன்னும் பத்து ரூவாதான் இருக்கிறது. இந்தா இதையும் நீயே வைச்சுக்கோ!"

"நல்ல நாளும் அதுவுமாக் குழந்தைக்கு ஒரு சட்டையாச்சும் தச்சுப் போடமாட்டீங்களா?"

"குழந்தைக்குச்சட்டை மட்டுமா? உனக்கு ஒரு புடவை, எனக்கு ஒரு வேட்டி - எல்லாம் வாங்க வேண்டியதுதான்"

"எப்போ வாங்கறது? பொங்கலுக்கு இன்னும் ரெண்டு நாள்தானே இருக்குது!"

"அதுக்குள்ளே எங்கேயாச்சும் கன்னம் வைக்கணும்...."

"எதுக்கு?"

"திருடத்தான்!"