பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பும் அருளும்

409

செய்துவிட்டு, "நான் கடைசி கல்யாணத்திற்குத் தயாராகிவிடலாம் என்று இருக்கிறேன்!” என்றார்.

"என்னமோ போங்கள், எவன் யாருக்கு எங்கே பிறந்திருக்கிறானோ!" என்று சொல்லிவிட்டு அம்மா உள்ளே வந்தாள். அதுதான் சமயமென்று, "இதோ, ரத்னாவுக்காக நான் பிறந்திருக்கிறேனே!"என்றேன்.

"அப்படியா சமாச்சாரம்? - கொஞ்சம் பொறு, நாளைக்கே அவர்களை வேறு வீடு பார்த்துக்கொள்ளச் சொல்கிறேன்"என்று உறுமினாள் அம்மா.

அவ்வளவுதான்; "அம்மா அந்தப் பெண்ணை நான் கல்யாணம் செய்து கொள்வது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அத்துடன் அதை விட்டுவிடுங்கள்; நானும் விட்டு விடுகிறேன். அதற்காக இந்த வீட்டைவிட்டு அவர்களைக் காலி செய்யவோ, அவர்களிடம் கடுமையாகவோ நடந்து கொள்ள வேண்டாம்!" என்று நான் கெஞ்சு கெஞ்சு என்று கெஞ்சினேன்.

அதற்குப் பிறகு அம்மா ஒருவாறு சமாதான மடைந்து, "ஏற்கெனவே கெட்டது போதாதென்று மேலும் கெட்டுப் போகப் பார்க்கிறாய்? நம்மை விட மேலான இடம் நமக்காக எத்தனையோ நாட்கள் காத்துக் கொண்டிருக்கும்போது ஏன் இப்படியெல்லாம் உளறுகிறாய்?" என்றாள்.

அத்துடன் அவள் நின்றுவிடவில்லை. மறுநாளே அந்த மேலான இடத்துக்குக் கிளம்பி விட்டாள்!

அன்று மாலை நான் ஆபீஸிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய போது அம்மா ஏனோ அசோகவனத்துச் சீதைபோல் காட்சி அளித்தாள். “என்ன, அம்மா! என்ன நடந்தது?"என்று பரபரப்புடன் கேட்டேன்.

விக்கலுக்கும், விம்மலுக்கும் இடையே, "ஆயிரம் தடவை நம் வீடு தேடி வந்து, “எங்கள் ராணி உங்கள் பிள்ளைக்குத்தான், எங்கள் ராணி உங்கள் பிள்ளைக்குத்தான் என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தார்களே, இப்போது என்ன சொல்கிறார்கள் தெரியுமா? 'உன்னுடைய கல்யாணப் பேச்சை எடுத்ததும், 'உன் பிள்ளைக்கா எங்கள் ராணி வேண்டும்?' என்று எகத்தாளமாகச் சொல்லி, எல்லோருமாகச் சேர்ந்து குலுங்கச்சிரிக்கிறார்கள்? உனக்குச்சம்பளம் அறுபது ரூபாயாம். அவர்கள் மோட்டார் டிரைவருக்கே மாதம் எழுபத்தைந்து ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்களாம். அதை நினைக்க நினைக்க என் வயிறு பற்றி எரிகிறது! என்னகாலம் இது? நமக்கு வந்த