பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


அப்போது கோழிகளின் கூக்குரலைக் கேட்டுக் குடிசையை விட்டு வெளியே வந்த ஒரு விவசாயி, "டோய், ஓநாய்டோய்!” என்று குரல் கொடுக்க, அந்தக் குரலைத் தொடர்ந்து ஏழெட்டுப் பேர் கம்பும் கையுமாக ஒடி வர "நடித்தது போதும்!" என்று எடுத்தது ஒட்டம் ஒநாய்!

"ஐயா, நல்லவரே! ஏன் ஒடுகிறீர்கள்? உமக்குத்தான் பயமும் இல்லை, பகைவனும் இல்லையே? ஏன் ஒடுகிறீர்கள்? நில்லுங்கள் அண்ணாச்சி, நில்லுங்கள்!" என்று தன்னால் ஆனமட்டும் அதை அழைத்துப் பார்த்தது ஆடு.

ஒநாய் நிற்கவில்லை!

荔,荔,荔

8. பத்தாவது ரத்தினம்

"ஒருமைப்பாட்டுக் குழு" என்று ஒன்றும் நிறுவாமலே ஒற்றுமையாயிருந்து வந்த ஒன்பது ரத்தினங் களுக்குள், நம்மில் யார் பெரியவன்? என்று ஒரு நாள் சண்டை வந்துவிட்டது.


நானே பெரியவன்!" என்றது வைரம்.

இல்லை, நானே பெரியவன்!" என்றது வைடூரியம்

"அட கடவுளே, இந்தச் சண்டையைத் தீர்த்து வைக்க ஒரு வழியும் இல்லையா?" என்று தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டது கோமேதகம்.

"இருக்கிறது!" என்றது மரகதம்.