பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3O

இந்தச் சமயத்தில் யாரோ கலகலவென்று நகைக்கவே, "யார் அது?" என்று கேட்டுக்கொண்டே திரும்பிப் பார்த்தது ஊக்கம். "கவலை வேண்டாம்; உங்கள் அனைவரையும் காப்பாற்ற நான் இருக்கிறேன்!” என்றது சட்டம்.

“பூ நீதானா! எங்களை நீ காப்பாற்றுவது ஒரு பக்கம் இருக்கட்டும்; முதலில் உன்னை நீயே காப்பாற்றிக் கொள்ள முடிகிறதா என்று பார்!" என்றது அது.

"ஏன் முடியாது?" என்று அதைத் திருப்பிக் கேட்டது

இது.

"அதோ பார், அந்தப் பட்டினியை? அரிசி வைத்துக் கொண்டே இல்லை என்று சொன்னதற்காக அது ஒரு வியாபாரியைக் குத்திக் கொன்றுவிட்டது!" என்றது ஊக்கம்.

"இவ்வளவுதானே? இதோ பார், அந்தப் பட்டினியை நான் என்ன செய்கிறேன் என்று!" என்று சூள் உரைத்துக்கொண்டே விரைந்தது சட்டம்.

அதற்குள் அந்தப் பட்டினி தன்னையும் குத்திக் கொன்றுகொண்டுவிடவே, "இப்போளது அதை உன்னால் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டது ஊக்கம்.

"ஒன்றும் செய்ய முடியாது அப்பனே, ஒன்றும் செய்ய முடியாது!" என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டது சட்டம்.

荔,荔,荔