பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35


அப்போது, "அட, குருடர்களே! நீங்கள் உலகத்தைப் பார்த்த லட்சணம் இதுதானா? சரியாய்ப் பாருங்கள், நீங்கள் அளப்பவையனைத்தையும் அதில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும்!" என்றது ஒரு குரல்.

"யார் அது?" என்று கேட்டுக்கொண்டே வானம் பாடியும் மயிலும் அந்தக் குரல் வந்த திசையை நோக்கித் திரும்பின.

ஆலமரத்தின் கிளையொன்றில் அதைச் சொன்ன வெளவால் தலைகீழாகத்தொங்கிக்கொண்டிருந்தது!

荔莎,荔

20. சமதர்மம்

கடைத் தெருவைக் கூட்டம் வந்து மொய்க்கும் நேரம். தன் கடையிலிருந்த பழங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்துத் துடைத்து வைத்துக் கொண்டிருந்தான் கடைக்காரன்.

புது மெருகு ஏற்றப்பட்ட ஆரஞ்சுப் பழம் ஆற்றாமை யுடன் பொருமிற்று:

"நம்மையெல்லாம் துடைத்து வைப்பதோடு சரி; அந்த ஆப்பிள் பழத்துக்கு மட்டும்......"

"என்னவாம்?" என்று இடைமறித்துக் கேட்டது திராட்சை.

"வெள்ளைக் கலை உடுத்தி, வெள்ளைப் பணி பூண்டு, வெள்ளை அரியாசனத்தில் ஏற்றி......"