பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21. பெருமை

"என்னால்தான் நேரம் ஒடுகிறது!" என்றது கடிகாரம்.

"என்னால்தான் காலம் ஒடுகிறது!" என்றது காலண்டர்.

"இவை இரண்டும் இப்படிப் பீற்றிக் கொள்கின் றனவே, அந்தச் சூரியன் மட்டும் ஏன் வாயைத் திறக்க மாட்டேன் என்கிறது?" என்று வானத்தை நோக்கிக் கேட்டது பூமி.

அதற்குப் "பீற்றிக்கொள்ள வேண்டிய அவசிய மில்லை!" என்றது வானம்.

浙。浙。浙

22. காதல்

மலர் விரிந்து மணம் பரப்பிற்று; அந்த மணத் தையே தனக்கு விடுத்த அழைப்பாகக் கொண்டு அதைத் தேடி வந்தது ஒரு வண்டு.

ரீங்...... ரீங்...... ரீங்......

“வந்துவிட்டயா, என்னைச் சுற்றிச் சுற்றி வந்து ரீங் காரம் பாட?” என்றது மலர், தென்றலில் சற்றே அசைந்து.

"நானா வந்தேன்? மனம் கவரும் உன் மணமல்லவா என்னை இங்கே வரவழைத்தது? மகிழ்வூட்டும் உன் அழகல்லவா என்னைப் பாட வைத்தது?" என்று அடுக்க ஆரம்பித்தது வண்டு.