பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


"ஆமாம்; எதற்காக நீ என்ன்ைக் காதலிக்கிறாய் என்று எனக்குத் தெரியும்!"

“எதற்காக?"

"என்னிடம் இருக்கும் தேனைச்சுவைப்பதற்காக!"

இதைக் கேட்டதும் வண்டு சிரித்தது; "ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்டது மலர்.

"நதி மூலம், ரிஷி மூலத்தைப்போலக் காதல் மூலத்தையும் ஆராயக் கூடாது பெண்ணே, காதல் மூலத்தையும் ஆராயக் கூடாது" என்றது வண்டு.

荔,荔,荔

23. தெய்வம்

தான் விரித்த வலையில் விழுந்த ஈ ஒன்றைத் தாவிப்பிடித்தது சிலந்தி.

"ஐயோ, என்னைக் கொல்லாதே! எளியாரை வலியார் அடித்தால் வலியாரைத் தெய்வம் அடிக்கும்!" என்று அலறியது ஈ.

"கவலைப்படாதே, அந்தத் தெய்வத்தைத்தான் இப்போது நீ பார்க்கப் போகிறாய்!” என்று சொல்லிக் கொண்டே, சிலந்தி அதை விழுங்கி வைத்தது.

அடுத்த கணம் தன்னை யாரோ கவ்விப் பிடிப்பது போலிருக்கவே, "யார் அது?" என்று மிகுந்த கோபத் துடன் கேட்டது சிலந்தி.

"நான்தான் தெய்வம்" என்றது பல்லி.

號。%號