பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25. கை பட்ட தோஷம்

வானளாவி நின்ற மரம் ஒன்றைச் சிறு கோடரி யொன்று வெட்டிக்கொண்டிருந்தது.

“ஏண்டா, பொடிப் பயலே உனக்கு நான்தானே பிடி கொடுத்தேன்? என்னை நீயே வெட்டலாமா? என்று கேட்டது மரம்.

" நான் என்ன செய்வேன்? மனிதனின் கைதான் என் மேலும் பட்டுவிட்டதே" என்றது கோடரி.

莎,荔,莎

26. அனுதாபம்

தன்மேல் சாத்தி வைக்கப்பட்டிருந்த ஏணியை இரக்கத்துடன் நோக்கி, "அனுதாபப்படுகிறேன்; உனக்காக நான் ரொம்ப ரொம்ப அனுதாபப் படுகிறேன்!" என்றது பரண்.

“எதற்காக அனுதாபப்படுகிறாய், தம்பி?" என்று கேட்டது இது.

"இதுவரையில் எத்தனையோ பேரை மேலே ஏற்றி விட்டிருக்கும் நீ, இன்னும் கீழேதானே இருக்கிறாய்?" என்றது இது.

"இதில் அனுதாபப்படுவதற்கு என்ன இருக்கிறது?" என்றது ஏணி.


"ஏன் இல்லை? பிறருக்குப் பயன்படும் நீ, உனக்குப் பயன்படவில்லையே?" என்றது பரண்.

ஏணி சொல்லிற்று: