பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28. இயற்கை

மாலை நேரம்; கையில் கமகமக்கும் ஒரு முழம் கதம்பத்துடன் உள்ளே நுழைந்தான் கணவன்.

அடுத்த கணம், "பூ ஒன்றுதான் குறைச்சல் எனக்கு!” என்ற அவன் மனைவியின் ஆத்திரம் மிகுந்த குரலைத் தொடர்ந்து, அந்தப் பூவும் வெளியே படுத்துக் கொண்டிருந்த நாயின்மேல் வந்து விழுந்தது.

திடுக்கிட்டெழுந்த நாய் விஷயத்தை ஒருவாறு புரிந்துகொண்டு, "இந்தப் பெண்கள் கணவன்மாருடன் சண்டை பிடிப்பதை விடமாட்டார்கள்போல் இருக்கிறது!" என்று முணுமுணுத்துக்கொண்டே திரும்பிப் பார்த்தது.

அருகே இருந்த மரத்தின்மேல் உட்கார்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்த காகம் சொல்லிற்று:

"நீ 'லொள், லொள்" என்று குரைப்பதை விடுகிறாயா, நான்தான் 'கா கா என்று கரைவதை விடுகிறேனா, அவர்கள் கணவன்மாருடன் சண்டை பிடிப்பதை விட?”

ああ あ

29. தத்துவம்

இரவு வந்ததும் வழக்கம்போல் தன்னுடன் படுத்துறங்க வந்த பனித்துளியை, "வா, வா!" என்று வர வேற்றது மூங்கில் இலை.

"நானும் ஒரு நாளைப்போல இரவில் வந்து உன் மேல் படுத்து உறங்குவதும், பொழுது விடிந்ததும் போய்