பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47


ஒரு கவளம் எச்சில் சோற்றுக்கு ஓராயிரம் நாய்களுடன் போட்டியல்லவா போட வேண்டியிருக்கிறது?’ என்றது நாய், வெறுப்புடன்.

குரங்கு சொல்லிற்று: "சுதந்திரத்தில்கூட எல்லோருக்கும் சுகம் கிட்டி விடாதுபோலும்?"

荔,荔,荔

32. கடமை

காட்டுக்கு வேட்டையாட வந்திருந்த தன் எஜமானனுக்காகப் புதரில் மறைந்திருந்த ஒரு முயலை 'விரட்டு, விரட்டு’ என்று விரட்டிற்று ஒரு நாய்.

ஒடி ஒடிக் களைத்த முயல் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்று, "அட, இனத் துரோகி என்னைப்போல் நீயும் ஒரு மிருகம்; உன்னைப்போல் நானும் ஒரு மிருகம். கேவலம், ஒரு சில எலும்புகளுக்காக என்னை நீ இப்படிக் காட்டிக் கொடுக்கலாமா?" என்று கேட்டது.

"காட்டிக் கொடுத்தால் இனத் துரோகி; காட்டிக் கொடுக்காவிட்டால் எஜமானத் துரோகி. இதில் எது தருமம், எது அதருமம்?" என்று நீதான் சொல்லேன்' என்று அதைத் திருப்பிக் கேட்டது நாய். முயல் விழிக்க, "அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். நீங்கள் உங்களுடைய கடமையைச் செய்யுங்கள் பலனை எதிர்பார்க்காதீர்கள்!" என்றது ஒரு கழுகு, அங்கிருந்த ஒரு மரக்கிளையில் அமர்ந்தபடி.

"சரி, இப்போது ஓடுவதுதான் என் கடமை!" என்று சொல்லிக்கொண்டே முயல் ஓடிற்று.